»   »  'நெனைச்ச நேரத்துக்கு தான் வருவோம்'... தங்களையே கலாய்த்துக் கொள்ளும் சிம்பு, பாண்டிராஜ்

'நெனைச்ச நேரத்துக்கு தான் வருவோம்'... தங்களையே கலாய்த்துக் கொள்ளும் சிம்பு, பாண்டிராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'சொன்னநேரத்துக்கு வரமாட்டோம் நெனச்ச நேரத்துக்குதான் வருவோம்' என்று புதிய வீடியோ ஒன்றை, இது நம்ம ஆளு இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டிருக்கிறார்.

சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, ஜெய் மற்றும் சூரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இது நம்ம ஆளு. 3 ஆண்டுகளாக நீண்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஒரு குத்துப்பாட்டுடன் முடிவுக்கு வந்தது.


Pandiraj Released New Video

முன்னதாக இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஆனால் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.


பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது.ஏற்கனவே இப்படம் தொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டு, சத்தியமா சீக்கிரம் வர்றோம் என்று பாண்டிராஜ் கூறியிருந்தார்.இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை தற்போது 'சொன்னநேரத்துக்கு வரமாட்டோம் நெனச்ச நேரத்துக்குதான் வருவோம்' என்று புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் 'படம் வரும் ஆனா வராது' என்ற ரீதியில் இது நம்ம ஆளு கூட்டணியை, தற்போது கலாய்த்து வருகின்றனர்.


இது நம்ம ஆளு வருமா?


English summary
Pandiraj Released new Video for Idhu Namma Aalu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos