»   »  பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் ஹைக்கூ!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் ஹைக்கூ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இது நம்ம ஆளு படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்துக்கு ஹைக்கூ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இயக்குனர் பாண்டிராஜ் தற்போது சிம்புவை வைத்து ‘இது நம்ம ஆளு' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார்.

சூர்யா - அமலா பால்

சூர்யா - அமலா பால்

இந்தப் படத்தில் சூர்யா - அமலா பால் ஜோடியாக நடிக்கின்றனர். ஆனால் பசங்க பாணியில் சிறுவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்குகிறார் பாண்டிராஜ்.

தலைப்பு

தலைப்பு

இப்படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்காமல் இருந்தனர். இந்நிலையில், தற்போது ‘ஹைக்கூ' என்று பெயர் வைத்துள்ளதாக பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சத்யன்

சத்யன்

சூர்யா, அமலா பால் தவிர, காமெடி நடிகர் சத்யன் முக்கிய வேடத்தில் இதில் நடிக்கிறார்.

பிப்ரவரி 20..

பிப்ரவரி 20..

இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை. வரும் 20-ந் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Pandiraj's Surya - Amala Paul starrer new movie has titled Hikoo.
Please Wait while comments are loading...