»   »  முதன் முறையாக பாண்டியராஜன் மாட்டுப் பொங்கல் பார்த்தது அமெரிக்காவில்தானாம்!

முதன் முறையாக பாண்டியராஜன் மாட்டுப் பொங்கல் பார்த்தது அமெரிக்காவில்தானாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டல்லாஸ்(யு.எஸ்): தனது வாழ்நாளில் முதல் தடவையாக நேரடியாக மாட்டுபொங்கலை அமெரிக்காவில் தான் பார்த்தேன் என்று நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

டல்லாஸ் நகரில் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த விழாவில் மாட்டுப்பொங்கல் கொண்டாடுவதற்காக மாடு ஒன்று வரவழைக்கப்பட்டிருந்தது. அலங்காரம் செய்து பொங்கல் பானையை வலம் வந்த மாட்டைக் கண்டு அமெரிக்க சிறுவர்கள் மகிழ்ந்து கொண்டாடினர்.

Pandiyarajan attends Pongal Festival in US

விழாவில் பேசிய பாண்டியராஜன், தானும் இப்போது தான் மாட்டுப்பொங்கலை நேரடியாக கண்டு மகிழ்ந்துள்ளேன் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "இங்கு தமிழர்கள் எல்லாம் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் ஒருவரை ஒருவர் அக்கறையுடன் நலம் விசாரிப்பதையும் பார்க்கிறேன். தன்னம்பிக்கையும் பாஸிட்டிவ் எண்ணங்களும் நிரம்பி இருப்பதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

Pandiyarajan attends Pongal Festival in US

எம்ஜியார் சொன்ன பொண்டாட்டி

ஒரு முறை எம்ஜிஆர் டாக்டர் ராதாகிருஷ்ணனைப் பார்க்க சென்றார். சொன்ன நேரத்திற்கு சரியாக சென்ற எம்ஜியாரைப் பார்த்து, பன்க்சுவாலிட்டி, பெர்சனாலிட்டி, எபிலிட்டி(ebility), பாப்புலாரிட்டி, என அனைத்து ‘டி'களும் கொண்ட நீங்கள் வருங்காலத்தில் நிச்சயம் பெரிய தலைவராக வருவீர்கள் என்று சொன்னார்.

Pandiyarajan attends Pongal Festival in US

வெளியில் வந்தவுடன், எம்ஜிஆரின் உதவியாளர், அண்ணே உங்க கிட்டே இத்தனை ‘டி' இருக்கு நீங்க நிச்சயம் பெரிய தலைவர் ஆயிடுவீங்கண்ணே என்றார். எம்ஜியாரோ, டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு முக்கியமான 'டி' யை சொல்ல மறந்துட்டாருடா. அது தான் பொண்டாட்டி என்று சொன்னார்.

Pandiyarajan attends Pongal Festival in US

பெரிய தலைவர் ஆக வேண்டுமென்றால் நல்ல மனைவி வேண்டும் என்ற அவசியத்தை எம்ஜியார் குறிப்பிட்டு சொன்னார்.

இங்கே கணவன், மனைவி, குழந்தைகள் என குடும்பமே ஒருத்தருக்கொருத்தர் அன்புடனும் அனுசரணையாகவும் இருப்பதை பார்க்கிறேன். நீங்கள் அனைவரும் அடுத்தடுத்த நிலைகள் என வாழ்வில் உயர்வடைய மனதார வாழ்த்துகிறேன்," என்றார்.

Pandiyarajan attends Pongal Festival in US

மேஜிக் பாண்டியராஜன்

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சீட்டுக்கட்டை வைத்து மேஜிக் செய்து மீண்டும் மீண்டும் சீட்டுகளை எடுத்துக் கொண்டே இருந்தார். இறுதியாக கூடு விட்டு கூடு பாயும் மேஜிக்கை அவருடையை ட்ரேட் மார்க் ஸ்டைலில் செய்த போது அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.

Pandiyarajan attends Pongal Festival in US

டல்லாஸில் தங்கியிருந்த பாண்டியராஜன் ‘கற்றதை கற்றுத் தருகிறேன்' என்ற பெயரில் இரண்டு நாள் திரைப்பட பயிலரங்கமும் நடத்தினார்.

-இர தினகர்

English summary
Director R Pandiyarajan has attended Pongal festival at Dallas, US on few days back.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X