»   »  சாலையோரம்... குப்பைக் கிடங்கில் படப்பிடிப்பு... வாந்தியெடுத்த நாயகி!

சாலையோரம்... குப்பைக் கிடங்கில் படப்பிடிப்பு... வாந்தியெடுத்த நாயகி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஞ்சாதே படத்துக்குப் பிறகு சாலையோரம் என்ற படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கிறார் பாண்டியராஜன். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது நாயகி வாந்தி எடுத்து அவதிப்பட்டார்.

இயக்குனர் பி.வாசுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே.மூர்த்தி கண்ணன் திரைக்கதை எழுதி இயக்கி வரும் சாலையோரம், படத்தில் ராஜ் கதாநாயகனாகவும், செரீனா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். சிங்கம் புலி, முத்துக்காளை, லொள்ளு சபா மனோகர், பாய்ஸ் ராஜன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

துப்புரவு தொழிலாளிக்கும் மருத்துவத்துக்குப் படிக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல்தான் படத்தின் கதை. மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

துப்புரவு தொழிலாளி

துப்புரவு தொழிலாளி

படத்தின் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மூர்த்தி கண்ணன் கூறுயில், சாலையோரம் படத்தில் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துள்ளேன்.

குப்பைக் கிடங்கில்

குப்பைக் கிடங்கில்

குப்பை லாரி முன்னால் போனால் நாம் மூக்கை பிடிக்கிறோம். நாங்கள் குப்பைகள் இருக்கும் குப்பை கிடங்கில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இந்த இடத்தில் படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலைகள் செய்தார்கள்.

நாயகிக்கு வாந்தி

நாயகிக்கு வாந்தி

படப்பிடிப்பின் போது நடிகை செரீனாவுக்கு வாந்தி வந்துவிட்டது. தொடர்ந்து அவரால் அங்கு இருக்க முடியவில்லை. பின்னர் டாக்டரை வரவழைத்து சிகிச்சைக்குப்பின் மீண்டும் குப்பை கிடங்கில் நடித்தார்.

சிங்கம்புலி டான்ஸ்

சிங்கம்புலி டான்ஸ்

சிங்கம்புலிக்கு இந்த குப்பை கிடங்கில் மேல் நின்று நடனம் ஆடுவது போல் காட்சி அமைத்தோம். அதை அவர் மிகவும் கஷ்டப்பட்டு சிறப்பாக நடித்தார்," என்றார்.

English summary
Actor - director Pandiyarajan plays villain role after a decade.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil