»   »  ஆன்லைனில் சினிமா பாடம் நடத்துகிறார் இயக்குநர் பாண்டியராஜன்!

ஆன்லைனில் சினிமா பாடம் நடத்துகிறார் இயக்குநர் பாண்டியராஜன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு திரைப் படத்தை எடுப்பதற்கு கற்பனை, படைப்புத்திறமை இருந்தால் மட்டும் போதாது. கதையைக் காட்சிப் படுத்துவது எப்படி, இயக்குவது எப்படி என்கிற தொழில் சார்ந்த அடிப்படை அறிவு தேவை.

அதற்கான பிரத்யேக ஆன்லைன் வகுப்புகளை சினிமா ஆர்வம் உள்ளவர்களுக்கு நடத்த முன் வந்துள்ளார் நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.பாண்டியராஜன்.

Pandiyarajan to teach filmmaking online

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற உள்ள இந்த சினிமா பயிற்சிப் பட்டறையின் மூலம் கதை உருவாக்கம் முதல் படம் வெளியிடுவது வரை உள்ள அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ளலாம்.

உலகின் எந்த மூலையில் இருந்தும் ஆன்லைன் மூலம் இந்த வகுப்புக்களைக் கற்றுக் கொள்ளலாம். மேலும் இப்பயிற்சிப் பட்டறையில் சேர ஆர்வம் மட்டுமே தகுதியாகக் கருதப்படுகிறது. இதுதான் இந்த வகுப்பின் சிறப்பம்சம்.

சினிமாவைப் புத்தகங்களை வைத்து மட்டுமே கற்றுக் கொள்ள முடியாது. திரையுலகில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த அனுபவம் பெற்ற ஒருவர் நடத்தும் பயிற்சிப்பட்டறை பாடங்கள் மூலம் சினிமா பற்றிய செய்முறை நுணுக்கங்களை சிறப்பாக அறிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு rpandiarajan.com என்ற வலைத்தளத்தைக் காணவும்.

English summary
Director R Pandiyarajan is going to teach film making online through his rpandiarajan.com.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil