»   »  வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்தார் சுயம்புலிங்கம் அண்ணாச்சி

வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்தார் சுயம்புலிங்கம் அண்ணாச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஜூலை மாதம் கமல் கவுதமி நடிப்பில் வெளிவந்த பாபநாசம் திரைப்படம் வெற்றிகரமாக தமிழ்நாட்டில் 50 நாட்களைத் தாண்டியுள்ளது.

இன்னும் கூட சில திரையரங்குகளில் படம் 70% நிரம்புவதாக தியேட்டர் அதிபர்கள் கூறியுள்ளனர். இந்தக் காலத்தில் ஒரு படம் வெளிவந்து 1 வாரம் ஓடுவதே பெரிய விஷயம். இந்த நிலையில் நல்ல கதையுடன் வெளியான பாபநாசம் 50 நாட்களைக் கடந்துள்ளது.

படம் 50 நாட்களைக் கடந்ததை படக்குழுவினர் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை, ஆனால் தமிழ் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விட்டனர்.

#50daysofpapanasam என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி அதில் பாபநாசம் படத்தில் தங்களைக் கவர்ந்த காட்சிகள் மற்றும் படத்தின் சிறப்புகள் ஆகியவற்றை எடுத்துக் கூறி இந்திய அளவில் பாபநாசம் திரைப்படத்தைப் பற்றி பேச வைத்திருக்கின்றனர்.

அவற்றில் இருந்து சில பதிவுகளை இங்கே காணலாம்.

கமலின் சிறந்த படங்களில் ஒன்று

கமல் சாரே நம்ப முடியாத அளவுக்கு பாபநாசம் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது, படத்தில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் செண்டிமெண்ட் கிளைமாக்ஸ் ஆகியவை சரியாக அமைந்ததில் படம் முழுமை பெற்றிருக்கிறது. கமல் சாரின் வாழ்க்கையில் ஒரு சிறந்த படமாக பாபநாசம் என்றுமே இருக்கும் விஷ்ணு தியாகராஜன்.

தமிழ் முன்னணி வகிக்கிறது

குற்றம் கடிதல் படம், சென்னையின் பிறந்தநாள், புலி டிரெய்லர் 2 லட்சம் பார்வைகளைத் தாண்டியது மற்றும் பாபநாசம் 50 நாட்கள் போன்ற ஹெஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளன. தமிழ் மொழி இந்திய அளவில் முன்னணி வகிக்கிறது என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் மைக்கேல்ராஜ் தமிழன்டா.

சிறந்த படமாக என் வாழ்நாளில் இருக்கும்

என் வாழ்நாளில் பாபநாசம் என்ற சிறந்த திரைப்படமொன்றை நான் பார்த்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் குகன்.

மிகப்பெரிய ஹிட்டடித்த குடும்பத் திரைப்படம்

"படம் வெளிவந்து சரியாக 8 வாரங்கள் ஆகின்றன இன்றளவும் சன் டிவியின் டாப் 10 படங்களில் 6 வது இடத்தில் இருக்கிறது பாபநாசம், சுயம்புலிங்கம் அண்ணாச்சியின் விதிகள் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து இருக்கின்றன" சுந்தர்.

உலகநாயகனின் சக்தி

பாபநாசம் வெளியாகி சரியாக 2 வாரங்கள் கழித்து படத்தைப் பார்த்தேன் 2 வாரம் தாண்டியும் படம் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடிக் கொண்டிருந்தது, உலகநாயகனின் சக்தி என்று கூறியிருக்கிறார் வினோத்.

திரையரங்குகள் கொண்டாடும்

திரையரங்குகள் கொண்டாடும் பாபநாசம் வெற்றிகரமான 50 வது நாள் என்று கூறியிருக்கிறார் சரவணன்.

தலைப்புகள் தேவையில்லை

பாபநாசம் கொண்டாடத்திற்கு தலைப்புகள் தேவையில்லை அசலை(திரிஷ்யம் மலையாளம்) விடவும், நடிப்பில் மிஞ்சியிருக்கிறார் கமல், கமல் என்றுமே கமல் தான் இது பிரியங்காவின் ஸ்டேட்டஸ்.

இது போன்று ரசிகர்கள் பலரும் பாபநாசம் திரைப்படத்தின் 50 வது நாளை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர், ஆனால் இது எதையும் கண்டு கொள்ளாமல் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார் கமல். அதனால் தான் அவர் உலகநாயகன்!

English summary
Papanasam 50 Days Celebration in Social Networks, Fans Comments.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil