»   »  முதல் முறையாக ஒரு பிரஸ்மீட்டுக்காக செட் போட்ட பாபநாசம் குழு!

முதல் முறையாக ஒரு பிரஸ்மீட்டுக்காக செட் போட்ட பாபநாசம் குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு படத்தின் பிரஸ் மீட்டை அதுவும் சக்ஸஸ் மீட்டை ஏதாவது ஹோட்டலின் அரங்கில் நடத்துவார்கள்.. அல்லது பிரசாத் லேபில் நடத்துவார்கள்.

ஆனால் கமல் ஹாஸனின் பாபநாசம் பட வெற்றியை தனி அரங்கம் அமைத்து அதில் வைத்து நடத்தினார்கள்.


முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது. பாபநாசம் படத்தில் வரும் வீடு, போலீஸ் ஸ்டேஷன், டீக்கடை இவற்றை அப்படியே இமேஜ் அரங்கில் செட்டாகப் போட்டு, அந்தப் படத்தில் வரும் கேரக்டர்களாகவே நடிகர் நடிகைகளை தோன்ற வைத்திருந்தார் இயக்குநர் ஜீது ஜோசப்.


(பாபநாசம்.. நன்றி சொல்ல ஒரு கூட்டம்)


நடித்துக் காட்டினர்

நடித்துக் காட்டினர்

படத்தில் இவர்கள் என்ன மாதிரி உடையில் தோன்றினார்களோ, அதேபோல் உடையணிந்து, படத்தின் சில காட்சிகளை மேடையில் நடித்தும் காட்டினர்.


முதல் முறை

முதல் முறை

நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் இதுமாதிரி, ஒரு படத்தின் கதையை படக்குழுவினர் நடித்துக் காட்டியது இதுதான் முதல் முறை என்பதால் அனைவரும் அசந்து போனார்கள்.


கமல்

கமல்

கமல் வேட்டி - சட்டையில் வந்திருந்தார். ஆனால் அவர் முகம் மட்டும் தூங்காவனம் பட கெட்டப்பில் இருந்தது. பாபநாசம் ராணியாக கவுதமி தோன்றினார்.


நடிகர்கள்

நடிகர்கள்

எஸ்தர், நிவேதா தாமஸ், எம்.எஸ்.பாஸ்கர், போலீஸ் வேடத்தில் வந்த நடிகர்கள் என படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர்.


English summary
For the very first time, a set was re created as it is from Papanasam movie for a press meet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil