»   »  ரூ. 100 கோடியை வாரிய பாபநாசம்.. பாகுபலி சுனாமியை வீழ்த்தி சாதனை!

ரூ. 100 கோடியை வாரிய பாபநாசம்.. பாகுபலி சுனாமியை வீழ்த்தி சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் 100 கோடிப்படங்களின் பட்டியலில் இணைந்து சாதனை படைத்திருக்கிறது பாபநாசம் திரைப்படம். கடந்த 3 ம் தேதி வெளியாகி இன்று வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது திரைப்படம்.

கடந்த 3 ம் தேதி வெளியாகி இன்று வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது திரைப்படம். இடையில் பாகுபலி போன்ற குறுக்கீடுகள் வந்தபோதும் குடும்பஸ்தர்களின் ஆரவார ஆதரவுடன் குடும்பம் குடும்பமாக ரசிக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.


திரிஷ்யம் மோகன்லால்- மீனா நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது, மலையாளத்தைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கிலும் வெளியாகி படம் தொடர் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டது படம்.


3 மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது, கமல் - கவுதமி நடிப்பில் உருவான பாபநாசம் திரைப்படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப்பே தமிழிலும் இயக்கியிருந்தார்.


திரிஷ்யம்

திரிஷ்யம்

மலையாளத்தில் மோகன்லால் - மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்றது, அதிரி புதிரி ஹிட் அடித்த இந்தப்படம் 55 கோடியை வசூலித்து மலையாளத்தில் வெளிவந்தத் திரைப்படங்களில் அதிகம் வசூலித்த ஒரு திரைப்படமாக மாறியது. அதுமட்டுமின்றி ஏகப்பட்ட விருதுகளையும் வாங்கிக் குவித்திருந்தது படம்.


தெலுங்கு, கன்னடத்திலும்

தெலுங்கு, கன்னடத்திலும்

மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது திரைப்படம்.


தமிழில் பாபநாசம்

தமிழில் பாபநாசம்

மற்ற 3 மொழிகளிலும் படம் வெளியாகி வெற்றி அடைந்ததால் தமிழில் இந்தப் படத்தை பாபநாசம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்தார் கமலஹாசன். மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீது ஜோசப்பே தமிழிலும் படத்தை இயக்கினார்.


தமிழிலும் வெற்றி

தமிழிலும் வெற்றி

நல்ல படத்தை எந்த மொழியில் எடுத்தாலும் படம் வெற்றி பெறும் என்ற உண்மையை நிரூபித்த திரிஷ்யம் தமிழிலும் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டது.


கமல் - கவுதமி

கமல் - கவுதமி

பாபநாசம் படத்தில் கமலின் ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் நடிகை கவுதமி நடித்திருந்தார், அதே போன்று நீண்ட வருடங்கள் கழித்து நடிகர் கமலஹாசன் 2 பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக இந்தப் படத்தில் நடித்திருந்தார்.


ரசிகர்களால் நிரம்பிய திரையரங்குகள்

ரசிகர்களால் நிரம்பிய திரையரங்குகள்

தமிழில் சுமார் 6 மாதங்கள் கழித்து பல திரையரங்குகளை ஹவுஸ்புல்லாக நிரப்பிய பெருமை பாபநாசத்தையே சேரும், குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வந்து படத்தைப் பார்த்து மகிழ்ந்தனர்.


100 கோடியில் இணைந்த பாபநாசம்

100 கோடியில் இணைந்த பாபநாசம்

படம் உலகமெங்கும் இதுவரை சுமார் 100 கோடியை வசூலித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் பாபநாசம் தரப்பில் இருந்து வெளியாகி உள்ளது.


பாகுபலியின் வேகத்திலும் அசராத பாபநாசம்

பாகுபலியின் வேகத்திலும் அசராத பாபநாசம்

உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகிய பாகுபலி திரைப்படத்தையும் மீறி பாபநாசம் திரைப்படம் வசூலில் சாதித்துள்ளது, இன்றுவரை பல தியேட்டர்களில் 60- 70% இருக்கைகள் நிரம்புவதாக தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.


ட்வீட் செய்து மகிழ்ந்த ஜிப்ரான்

பாபநாசம் திரைப்படத்தின் இந்த வெற்றியை ட்வீட் செய்து மகிழ்ந்துள்ளார் படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் " பாபநாசம் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.


நல்ல படங்கள் என்றுமே வெற்றிபெறத் தவறியதில்லை...English summary
Kamal - Gautami Starrer Papanasam Movie, Now Entered in 100 Crore Club.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil