»   »  தேதியை மாத்துறதா இல்ல... ஜுலை 3-ல் பாபநாசம் கன்பர்ம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தேதியை மாத்துறதா இல்ல... ஜுலை 3-ல் பாபநாசம் கன்பர்ம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜூலை மூன்றாம் தேதி கமல் நடித்த பாபநாசம் படத்தை நிச்சயம் வெளியிடப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பாக ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா ராஜ்குமார் இணைந்து தயாரித்து கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் பல எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகியுள்ள படம் பாபநாசம்.


அறிவிப்பு

அறிவிப்பு

இதுகுறித்து தயாரிப்பாளர் தரபிபிலிருந்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:


சமீபத்தில் வெளியான பாபநாசம் படத்தின் முன்னோட்டமும், பாடல்களும் ரசிகர்களிடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இப்படம் வெளியாகவிருக்கும் அதிகார்ப்பூர்வ தேதியை தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.ஜூலை 3

ஜூலை 3

வரும் ஜூலை மாதம் 3ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட திரையில் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.


இதான் கதை

இதான் கதை

ஒரு குடும்பத் தலைவன் தனது குடும்பத்தை எந்த அளவுக்கு நேசிக்கவேண்டும், ஒரு தந்தை தனது மகளை எந்த அளவுக்கு பாதுகாக்க வேண்டும் என்பதை அனைவரும் தனது குடும்பத்துடன் பார்த்து பார்த்து ரசிக்கும் வண்ணம் பாபநாசம் உருவாகியுள்ளது.


ரிசர்வேஷன்

ரிசர்வேஷன்

இன்று நள்ளிரவு முதல் பாபநாசம் படத்தின் டிக்கெட்களை ஆன்லைன் சேவை மூலம் பதிவு செய்து பெற்று கொள்ளலாம்," என அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.


எதிர்ப்பு

எதிர்ப்பு

முன்னதாக ஜூலை 3-ம் தேதி வேறு சில படங்கள் வெளியாகவிருந்தன. கமல் பட ரிலீஸ் அறிவிப்பு திடீரென வெளியானதால் அவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில், தேதியை மாற்றுமாறு முறையிட்டனர். ஆனால் அவர்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை.


English summary
ஜூலை மூன்றாம் தேதி கமல் நடித்த பாபநாசம் படத்தை நிச்சயம் வெளியிடப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று நள்ளிரவு முதல் பாபநாசம் படத்தின் டிக்கெட்களை ஆன்லைன் சேவை மூலம் பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.
Please Wait while comments are loading...