»   »  முத்திரை பதித்து விட்டார் கமல்.. பாபநாசம் குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் உற்சாகம்!

முத்திரை பதித்து விட்டார் கமல்.. பாபநாசம் குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் உற்சாகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் பாபநாசம் திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருக்கிறது. மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப்பே தமிழிலும் இயக்கியிருப்பதால் படம் நன்றாக வந்திருக்கிறது.

Papanasam Movie Fans Review

பாபநாசம் படத்தை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர், குறிப்பாக கமலின் நடிப்பை எல்லோரும் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். ரசிகர்களின் பாராட்டுகளைக் கீழே காணலாம்.ஒரே ஒரு மாற்றம் என்னவெனில் படத்தின் மொழி, மற்றும் நடிகநடிகையர் மட்டும் மாறியிருக்கின்றனர். உலகநாயகன் தனது நடிப்பில் முத்திரை பதித்து இருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.படம் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி விட்டது, கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான் என்று கொண்டாடுகின்றனர் ரசிகர்கள். கமல் நெல்லைத் தமிழில் பேசியது மட்டுமின்றி, சுயம்புலிங்கமாகவும் மாறி இருக்கிறார், கமலின் நடிப்பு ஆவேசம் என்று புகழ்ந்து தள்ளுகின்றனர்.


படத்தின் வசனங்கள் நன்றாக இருக்கின்றன, குறிப்பாக ஆஷா சரத் பேசுவது மற்றும் அந்தக் கிளைமாக்ஸ் சூப்பர் என்று கூறியுள்ளார் ஒரு ரசிகர்.தொடர்ந்து பாராட்டு மழையில் நனைந்து வருகின்றது பாபநாசம் திரைப்படம்.


English summary
Papanasam movie has opened to positive reviews, Kamal Haasan's emotional and natural acting is the biggest highlight of the Tamil movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil