Parasakthi: ஜன நாயகனை ஓவர் டேக் செய்த பராசக்தி.. ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியாகிடுச்சு.. ஆனால்?
சென்னை: தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்கக்ப்படும் நிலையில், பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை ஜி.வி. பிரகாஷ் குமார் ப்ரோமோவுடன் தற்போது வெளியிட்டுள்ளார்.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்ட பலர் நடிப்பில் பீரியட் படமாக உருவாகி வரும் பராசக்தி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் பராசக்தி மோதவுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிளில் இருந்தே போட்டி ஆரம்பித்துள்ளது.
பராசக்தி முதல் பாடல் ப்ரோமோ: சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள பராசக்தி படத்தின் முதல் சிங்கிளாக "அடி அலையே" பாடல் வரும் வியாழக்கிழமை நவம்பர் 6ம் தேதி வெளியாகிறது. அதனை முன்னிட்டு தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீலீலா நடித்துள்ள அந்த பாடலின் ப்ரோமோ வீடியோ ஒன்றை ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடகி தீ உடன் இணைந்து பாடியுள்ளார்.
ஜனநாயகனை முந்திய பராசக்தி: கரூர் சம்பவம் காரணமாக தீபாவளிக்கே வெளியாக வேண்டிய ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்படியே அமைதியாக வெளியிடப்படாமல் இன்று வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் படங்களில் ஜன நாயகன் படத்தை முந்திக் கொண்டு பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் தற்போது அதிரி புதிரியாக வெளியாகி உள்ளது.
அதே டெய்லர் அதே வாடகை: சூரரைப் போற்று படத்தை போல பாடல்கள் சூப்பராக இருக்க வேண்டும் என சுதா கொங்கரா மீண்டும் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள பாடலை கேட்ட ரசிகர்கள் சூரரைப் போற்று பாடல் போலவே இருப்பதாகவும், ஹீரோ ஹீரோயினுக்கு லிப் சின்க்கே ஆகவில்லை என்றும் சூரரைப் போற்று படத்தில் வருவதை போலவே மார்க்கெட் செட்டப் உள்ளது என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் 100 கோடி அளவில் மட்டுமே வசூல் செய்த நிலையில், பராசக்தி படம் அவருக்கு அமரனையும் மிஞ்சும் படமாக வரும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் முதல் சிங்கிள் வெளியான உடனே ட்ரோல்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











