»   »  பார்ட்டியில் ரூ. 13 கோடி நிச்சயதார்த்த மோதிரத்தை தொலைத்த டிவி பிரபலம்

பார்ட்டியில் ரூ. 13 கோடி நிச்சயதார்த்த மோதிரத்தை தொலைத்த டிவி பிரபலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மயாமி: பார்ட்டியின்போது ரூ. 13 கோடி மோதிரத்தை தொலைத்துள்ளார் பிரபல தொலைக்காட்சி பிரபலமும், தொழில் அதிபருமான பாரிஸ் ஹில்டன்.

ஹாலிவுட் தொலைக்காட்சி பிரபலமும், தொழில் அதிபருமான பாரிஸ் ஹில்டனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு பிறந்த பிறகு கிறிஸ் ஜில்கா என்ற நடிகர் பாரிஸ் ஹில்டனுக்கு புரபோஸ் செய்தார்.

அவரும் ஜில்காவின் காதலை ஏற்று திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்.

 ரூ. 13 கோடி

ரூ. 13 கோடி

பாரிஸ் ஹில்டன் தனது காதலை ஏற்றுக் கொண்டதும் ரூ. 13 கோடி மதிப்புள்ள நிச்சயதார்த்த மோதிரத்தை கொடுத்தார் ஜில்கா. அந்த மோதிரத்தை பார்த்து பலரும் வியந்தனர்.

ஜில்கா

ஜில்கா

வெள்ளிக்கிழமை பாரிஸும், ஜில்காவும் மயாமியில் நடந்த பார்ட்டி ஒன்றுக்கு சென்றுள்ளனர். அப்போது பாரிஸின் நிச்சியதார்த்த மோதிரம் காணாமல் போயுள்ளது.

பதட்டம்

பதட்டம்

தனது நிச்சயதார்த்த மோதிரம் தொலைந்ததும் பாரிஸ் ஹில்டன் பதட்டம் அடைந்து கண்ணீர் விட்டுள்ளார். பார்ட்டிக்கு வந்தவர்கள் அனைவரும் மோதிரத்தை தேடியுள்ளனர்.

 ஆனந்த கண்ணீர்

ஆனந்த கண்ணீர்

ஒரு டேபிளில் இருந்த ஐஸ் பக்கெட்டில் மோதிரம் கிடந்ததை பார்த்து எடுத்து வந்து பாரிஸின் விரலில் அணிவித்துள்ளார் ஜில்கா. மோதிரம் கிடைத்த பிறகு தான் பாரிஸ் முகத்தில் சிரிப்பு வந்துள்ளது.

English summary
Television personality and business woman Paris Hilton nearly lost her Rs. 13 crore worth engagement ring at a party in Miami on friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X