»   »  கபாலிக்கு ஃப்ரான்ஸில் இரண்டாவது லட்டு... கொண்டாடு!

கபாலிக்கு ஃப்ரான்ஸில் இரண்டாவது லட்டு... கொண்டாடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேற்றோடு கபாலி ரிலீஸ் சம்பந்தப்பட்ட அனைத்து புரளிகளுக்கும் ஃபுல்ஸ்டாப் வைக்கப்பட்டுவிட்டது. நம் 'தமிழ் ஒன் இந்தியா' இணையதளம் ஜுலை 22 என்று ஜுன் இறுதியிலேயே சொல்லிவிட்டது. ஆனால் சில ஊடகங்கள் கிளப்பிவிட்ட வதந்திகளால் ரிலீஸ் தேதியில் சிக்கல் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது. நேற்றோடு சஸ்பென்ஸ் ஓவர்... அடுத்து?

Paris Rex Cinema extends another show for Kabali

உண்மையில் கபாலி ரிலீஸ் தேதி ரஜினி ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு உற்சாகத்தை கொடுக்குமோ அதற்கு நிகரான உற்சாகத்தை சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு கொடுத்திருக்கும். இன்றைய நிலையில் கபாலி ரிலீஸ் தேதி அறிவிப்புக்காக காத்திருந்த சின்ன படங்களின் எண்ணிக்கை 15 ஐத்


தாண்டும். கபாலி ரிலீஸுக்கு முதல் வாரமா? இல்லை கபாலி ரிலீஸான இரண்டாவது வாரமா? என்பதை யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.


Paris Rex Cinema extends another show for Kabali

இந்நேரத்தில் இன்னொரு சந்தோஷமான செய்தி. ஃப்ரான்ஸில் உள்ள உலக புகழ்பெற்ற ரெக்ஸ் சினிமாவில் இந்திய சினிமாக்களிலேயே முதன்முறையாக கபாலி திரையிடப்படுகிறது அல்லவா? அங்கே முதல் நாளுக்கான எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டனவாம். அந்த தியேட்டரில் மொத்தம் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இருக்கைகள் இருந்தாலும் சினிமாவுக்கான பார்வையாளர்கள் இருக்கைகள் 1300 தான். மற்றவை ஸ்டேஜ் ஷோவுக்கானவை.


எதிர்பார்த்ததை விட கபாலி டிக்கெட்டுகள் புக்கிங் ஆரம்பித்த சில மணி நேரத்திலேயே விற்று தீர்ந்துவிட்டனவாம். ஒரு இந்திய படத்துக்கு இத்தனை வரவேற்பு தங்கள் நாட்டில் இருக்கும் என்பதை எதிர்பார்க்காத ரெக்ஸ் சினிமாஸ் இப்போது மேலும் ஒரு ஷோ கபாலி படத்தை திரையிட முடிவு செய்துள்ளது.


Paris Rex Cinema extends another show for Kabali

எந்திரனில் கருணாஸ் சொல்லும் டயலாக் தான் நினைவுக்கு வருகிறது. கர்ப்பத்துல இருக்கும்போதே இப்படி எட்டி உதைக்கிறான்னா... ரிலீஸ் ஆயிட்டா...?

English summary
The Rex Cinema, Paris has decided to increase another show of Kabali after all the tickets for first show sold out.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil