twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பாரி பூரி கக்கூஸ் லாரி என கிண்டல் பண்ணுவதா?' - ஷங்கர் மீது பாரிவேந்தர் பாய்ச்சல்!!

    By Shankar
    |

    Parivendhar and Shankar
    இயக்குநர் ஷங்கர் பாரிவேந்தர் பெயரை வேண்டுமென்றே கிண்டலடித்து அவமானப்படுத்துவதாக இந்திய ஜனநாயக கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    பாரிவேந்தர் என்பவரது உண்மையான பெயர் பச்சைமுத்து. இவர்தான் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மற்றும் பல தொழில் நிறுவனங்களின் உரி்மையாளர். புதிய தலைமுறை இவரது தொலைக்காட்சிதான்.

    தனது பெயரான பச்சை முத்து என்பதை எந்திரன் படத்தில் ஒரு குடிகாரனுக்கு சூட்டிவிட்டார் என ஏற்கெனவே இவர் இயக்குநர் ஷங்கர் மீது குற்றம்சாட்டியிருந்தார் (ஏன், குடிப்பவர்களுக்கு பச்சைமுத்து என்ற பெயர் இருக்கக் கூடாதா என்ன?!!).

    இப்போது நண்பன் படத்தில் நாயகன் பாத்திரத்துக்கு பஞ்சவன் பாரிவேந்தன் என பெயரிட்டிருப்பதையும், படத்தில் அந்தப் பெயரில் விஜய் கல்லூரியில் படித்து ஆள் மாறாட்டம் செய்வதுபோல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதையும், அந்தப் பெயரை கதாநாயகி, பாரிவேந்தராவது பூரிவேந்தராவது என கிண்டலடிப்பதையும் குறை சொல்லி, தனது கட்சியின் சார்பில் அவதூறு வழக்கு தொடரப் போகிறாராம்!

    இதுகுறித்து இந்திய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் பி. ஜெயசீலன், சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகார் மனுவில், "எங்கள் கட்சி தலைவர் பாரிவேந்தர் பல லட்சம் மக்களின் நன்மதிப்பை பெற்றவர். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமம் மூலமாக கல்வி சேவையும் செய்கிறார். ஷங்கர் இயக்கிய “நண்பன்" படத்தில் பாரிவேந்தரை அவதூறு செய்துள்ளார். அந்த படத்தில் ஒரு மோசடி கதாபாத்திரத்துக்கு பாரிவேந்தன் பெயர் சூட்டியுள்ளார்.

    இன்னொரு பெண் கதாபாத்திரம் மது போதையில் பாரிவேந்தராவது பூரிவேந்தராவது என்று பேசுவது போன்றும் இன்னொரு இடத்தில் பாரி, பூரி, கக்கூஸ் லாரி என்ற வசனத்தை பயன்படுத்தியும் பாரிவேந்தரை களங்கப்படுத்தி உள்ளார். ஏற்கனவே தனது “சிவாஜி" படத்திலும் வள்ளல் பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை பெயர்களில் கதாபாத்திரங்கள் உருவாக்கி தமிழ் பெண்கள் கருப்பானவர்கள் என சித்தரித்தார்.

    “எந்திரன்" படத்தில் ஒரு குடிகாரனுக்கு பச்சைமுத்து என பெயர் சூட்டி அவர் பெண்களிடம் தகாத முறையில் நடப்பதுபோல் காட்சி அமைத்தார். எனவே ஷங்கர் மீதும் தயாரிப்பாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அவதூறான வார்த்தைகளை நீக்கவேண்டும்," என்று கூறியுள்ளார்.

    நாட்டுல எவ்வளவோ பிரச்சினை... பச்சைமுத்துவுக்கு அவர் பெயரே பிரச்சினை. விட்டா இதுக்கும் வழக்கு போடச் சொல்வாங்க போல!!

    English summary
    Parivendhar, the president of IJK party and SRM group has sued on Director Shankar for insulting his name in his movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X