»   »  திருட்டு விசிடி: பார்த்திபன் உண்ணாவிரதம்சென்னை:திருட்டு விசிடியை பொதுமக்கள் பார்க்காமல் புறக்கணிக்கக் கோரி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரானபார்த்திபன் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்தார்.பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள படம் குடைக்குள் மழை. இன்று இந்தப் படம் திரைக்கு வந்துள்ளது. இந்தப்படத்தை யாரும் திருட்டு விசிடியில் பார்க்க வேண்டாம் என்று பார்த்திபன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.திருட்டு விசிடி மூலம் இப் படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்ப வேண்டாம் என்று கேபிள் டிவிஆபரேட்டர்களுக்கு பார்த்திபன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-குடைக்குள் மழை வித்தியாசமாக ஒரு புதிய கோணத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. பெரிய திரையில் பார்த்தால்மட்டுமே திருப்தி தரும் வகையில் அதிநவீன வசதிகளைப் பயன்படுத்தி படம் தயாரிக்கப்பட்டுள்ளது.இது குட்டித்திரையில் பார்ப்பதற்கு ஏற்ற படமல்ல. எனவே எக்காரணம் கொண்டும் உங்கள் கேபிள் டிவியில்இப்படத்தை ஒளிபரப்ப வேண்டாம். இதனால் பணவருத்தம் என்பதை விட மனவருத்தம் அதிகமாக உள்ளது. இந்தவருத்தத்துக்கும் வலிகளுக்கும் பின்னால் நிறைய வடுக்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.இந் நிலையில் திருட்டு விசிடியினால் திரையுலகம் சந்திக்கும் பிரச்சினைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் காட்டும்விதத்திலும், திருட்டு விசிடியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரியும், திருட்டு விசிடிதயாரிக்கப்படுவதைக் கண்டித்தும் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்.குடைக்குள் மழை படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களுடன் சென்னைஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதத்தைத்தொடங்கினார். இன்று மாலை 5 மணிக்கு பார்த்திபன் உண்ணாவிரதத்தை முடித்தார்.உண்ணாவிரதம் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் திருட்டு விசிடிக்கு எதிரான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

திருட்டு விசிடி: பார்த்திபன் உண்ணாவிரதம்சென்னை:திருட்டு விசிடியை பொதுமக்கள் பார்க்காமல் புறக்கணிக்கக் கோரி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரானபார்த்திபன் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்தார்.பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள படம் குடைக்குள் மழை. இன்று இந்தப் படம் திரைக்கு வந்துள்ளது. இந்தப்படத்தை யாரும் திருட்டு விசிடியில் பார்க்க வேண்டாம் என்று பார்த்திபன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.திருட்டு விசிடி மூலம் இப் படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்ப வேண்டாம் என்று கேபிள் டிவிஆபரேட்டர்களுக்கு பார்த்திபன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-குடைக்குள் மழை வித்தியாசமாக ஒரு புதிய கோணத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. பெரிய திரையில் பார்த்தால்மட்டுமே திருப்தி தரும் வகையில் அதிநவீன வசதிகளைப் பயன்படுத்தி படம் தயாரிக்கப்பட்டுள்ளது.இது குட்டித்திரையில் பார்ப்பதற்கு ஏற்ற படமல்ல. எனவே எக்காரணம் கொண்டும் உங்கள் கேபிள் டிவியில்இப்படத்தை ஒளிபரப்ப வேண்டாம். இதனால் பணவருத்தம் என்பதை விட மனவருத்தம் அதிகமாக உள்ளது. இந்தவருத்தத்துக்கும் வலிகளுக்கும் பின்னால் நிறைய வடுக்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.இந் நிலையில் திருட்டு விசிடியினால் திரையுலகம் சந்திக்கும் பிரச்சினைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் காட்டும்விதத்திலும், திருட்டு விசிடியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரியும், திருட்டு விசிடிதயாரிக்கப்படுவதைக் கண்டித்தும் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்.குடைக்குள் மழை படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களுடன் சென்னைஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதத்தைத்தொடங்கினார். இன்று மாலை 5 மணிக்கு பார்த்திபன் உண்ணாவிரதத்தை முடித்தார்.உண்ணாவிரதம் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் திருட்டு விசிடிக்கு எதிரான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருட்டு விசிடியை பொதுமக்கள் பார்க்காமல் புறக்கணிக்கக் கோரி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரானபார்த்திபன் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்தார்.

பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள படம் குடைக்குள் மழை. இன்று இந்தப் படம் திரைக்கு வந்துள்ளது. இந்தப்படத்தை யாரும் திருட்டு விசிடியில் பார்க்க வேண்டாம் என்று பார்த்திபன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

திருட்டு விசிடி மூலம் இப் படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்ப வேண்டாம் என்று கேபிள் டிவிஆபரேட்டர்களுக்கு பார்த்திபன் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

குடைக்குள் மழை வித்தியாசமாக ஒரு புதிய கோணத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. பெரிய திரையில் பார்த்தால்மட்டுமே திருப்தி தரும் வகையில் அதிநவீன வசதிகளைப் பயன்படுத்தி படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது குட்டித்திரையில் பார்ப்பதற்கு ஏற்ற படமல்ல. எனவே எக்காரணம் கொண்டும் உங்கள் கேபிள் டிவியில்இப்படத்தை ஒளிபரப்ப வேண்டாம். இதனால் பணவருத்தம் என்பதை விட மனவருத்தம் அதிகமாக உள்ளது. இந்தவருத்தத்துக்கும் வலிகளுக்கும் பின்னால் நிறைய வடுக்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.

இந் நிலையில் திருட்டு விசிடியினால் திரையுலகம் சந்திக்கும் பிரச்சினைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் காட்டும்விதத்திலும், திருட்டு விசிடியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கோரியும், திருட்டு விசிடிதயாரிக்கப்படுவதைக் கண்டித்தும் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்.

குடைக்குள் மழை படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களுடன் சென்னைஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதத்தைத்தொடங்கினார். இன்று மாலை 5 மணிக்கு பார்த்திபன் உண்ணாவிரதத்தை முடித்தார்.

உண்ணாவிரதம் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் திருட்டு விசிடிக்கு எதிரான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil