»   »  'கோடிட்ட இடங்களை நிரப்புக' பார்த்திபனின் அடுத்த படத்தலைப்பு!

'கோடிட்ட இடங்களை நிரப்புக' பார்த்திபனின் அடுத்த படத்தலைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பார்த்திபன் இயக்கும் அடுத்த படத்துக்கு 'கோடிட்ட இடங்களை நிரப்புக' என்று பெயர் வைத்திருக்கிறார்.

இயக்குநர், நடிகர் என பன்முகங்களைக் கொண்ட பார்த்திபன் கடைசியாக இயக்கிய படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. வித்தியாசமான தலைப்புடன் வெளியான இப்படம் வசூலிலும் குறை வைக்கவில்லை.

Parthiban Direct Koditta Idangalai Nirappuga

இப்படத்துக்கு பின் நடிக்க மட்டுமே செய்த பார்த்திபன் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டு, அதற்கு 'கோடிட்ட இடங்களை நிரப்புக' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

இப்படம் குறித்து பார்த்திபன் ''இப்படத்தில் நானும், தம்பி ராமையாவும் நடிப்பது உறுதியாகியுள்ளது. சத்யா இசையமைக்கிறார். நாயகன், நாயகி யாரென்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. கண்டிப்பாக இப்படம் அனைவரையும் கவரும்'' என்று தெரிவித்தார். 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்திலும் தம்பி ராமையா முக்கிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
R.Parthiban's next movie has been Titled by Koditta Idangalai Nirappuga.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil