Don't Miss!
- News
ஊழியர்களுக்கு போனஸ்.. போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு.. பணத்தை அள்ளி வீசிய சீன நிறுவனம்!
- Sports
உலகக்கோப்பை வென்ற வீராங்கனைகளுக்கு டிராவிட் தந்த கவுரவம்.. இந்திய வீரர்களின் நெகிழ்ச்சி செயல்
- Technology
வாட்ஸ்அப் செயலியில் லைவ் லொகேஷன் ஷேர் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Lifestyle
அஸ்வினி நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Finance
தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது.. அதானி பற்றி ஹிண்டன்பர்க் ரிசர்ச்..!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
பொங்கல் ரிலீஸில் வாரிசு தான் ஃபர்ஸ்ட் சாய்ஸ்... உதயநிதி அப்படியான ஆளு: ஒப்பனாக பேசிய பார்த்திபன்!
சென்னை:
விஜய்
நடித்துள்ள
வாரிசு,
அஜித்தின்
துணிவு
திரைப்படங்கள்
பொங்கல்
ஸ்பெஷலாக
திரையரங்குகளில்
வெளியாகிறது.
வாரிசு
துணிவு
படங்களில்
கோலிவுட்
செலிபிரிட்டிகள்
எதை
முதலில்
பார்க்கப்
போகிறார்கள்
என்ற
விவாதம்
கடந்த
சில
தினங்களாக
இணையத்தை
ஆக்கிரமித்து
வருகின்றன.
இந்நிலையில்,
இதுகுறித்து
'நீ
வருவாய்
என'
படத்தில்
அஜித்துடன்
இணைந்து
நடித்துள்ள
பார்த்திபன்
கூறிய
பதில்
ட்ரெண்டாகி
வருகிறது.
எடுத்து
வைங்கடா
அந்த
மைக்கை..
வாரிசு
இசை
வெளியீட்டு
விழா..
ஹாட்
அப்டேட்
கொடுத்த
ராஜு
பாய்!

இரவின் நிழல் பார்த்திபன்
நடிகர், இயக்குநர் என கலக்கி வரும் பார்த்திபன், சமீபத்தில் இரவின் நிழல் படத்தை இயக்கியிருந்தார். உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ள இரவின் நிழல், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் திரையரங்குகளைத் தொடர்ந்து அமேசான் ஓடிடியிலும் வெளியானது. இந்நிலையில், தற்போது சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவிலும் இரவின் நிழல் திரையிடப்படுகிறது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பார்த்திபன்.

விருதுகள் மீது தான் அதிக ஆசை
தான் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் 114 விருதுகளை வாங்கியுள்ளதாக கூறிய பார்த்திபன், சென்னை சர்வதே திரைப்பட விழாவில் திரையிடுவதும் எனக்கு பெருமை எனக் கூறினார். மேலும், இந்தப் படம் 21 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது, ஆனால், அவ்வளவு லாபம் கிடைத்ததா இல்லையா என்பதை பற்றி எனக்கு கவலையில்லை. அதேநேரம் இரவின் நிழல் திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களை சென்றடைந்துள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களை விட திரைப்பட விழாக்கள்தான் என்னுடைய விழா. நான் இதுவரை மூன்று சர்வதேச விருதுகளை வாங்கிவிட்டேன் இருந்தாலும் எனக்கு விருதுகளின் மீது உள்ள ஆசை இனமும் போகவில்லை எனக் கூறினார்.

வாரிசு தான் முதலில் பார்ப்பேன்
தொடர்ந்து பேசிய பார்த்திபன், விஜய்யின் வாரிசு பட சர்ச்சை குறித்தும் மனம் திறந்தார். விஜய் போன்ற நடிகர்களுக்கு பிரச்சினை வந்தால் தான் அவர்கள் நடித்த திரைபடம் ஹிட் அடிக்கும். அதோடு எல்லா பிரச்சினைகளையும் தாண்டி வெற்றி பெறுவதும் ஹீரோயிசம் தான். நான் 'வாரிசு' படத்தை தான் முதலில் பார்ப்பேன் என்று சொல்வதற்கு 'துணிவு' வேண்டும் என தன்னுடைய வழக்கமான பாணியில் பதில் கூறினார். பார்த்திபன் ஹீரோவாக நடித்த 'நீ வருவாய் என' படத்தில் அஜித் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால், அதையெல்லாம் நினைத்துப் பார்க்காத பார்த்திபன் வாரிசு படத்தை முதலில் பார்ப்பேன் எனக் கூறியுள்ளது அஜித் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

உதயநிதி அப்படியான ஆளு
சமீபத்தில் தான் துணிவு பட இயக்குநர் ஹெச் வினோத்தும் வாரிசு படத்தை தான் முதலில் பார்ப்பேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது பார்த்திபனும் அப்படியே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வாரிசு படத்தை முதலில் பார்க்க துணிவு வேண்டும் எனக் கூறியுள்ளது, எதாவது உள்குத்தாக இருக்குமோ எனவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இதனிடையே இறுதியாக பேசிய பார்த்திபன், பெண்களின் சக்தி பற்றி ஒரு படம் எடுக்க பணிகள் நடந்து வருவதாக கூறினார். மேலும், உதயநிதி அமைச்சராக வந்த பிறகு நல்ல காரியம் நடந்துள்ளது. அவரை வாரிசு என்று ஒதுக்கிவிடக்கூடாது. ஏனெற்றால் உதயநிதியிடம் அவருடைய தாத்தாவின் திறமையின் ஒரு பகுதி இருக்கிறது. உதயநிதிக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக நல்ல அமைச்சராக இருப்பார் என்று கூறினார்.