»   »  விஜய் சேதுபதியைத் தொடர்ந்து விஷ்ணுவுக்கு வில்லனாகும் பார்த்திபன்

விஜய் சேதுபதியைத் தொடர்ந்து விஷ்ணுவுக்கு வில்லனாகும் பார்த்திபன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷ்ணு விஷால் -சுசீந்திரனின் அடுத்த படத்தில், விஷ்ணுவுக்கு வில்லனாக பார்த்திபன் நடிக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக விஷ்ணு விஷால்-சுசீந்திரன் கூட்டணி இணைந்துள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், இசையமைப்பாளராக டி.இமானும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

Parthiban Play a Baddie in Suseendhiran Movie

சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி-விஷ்ணு விஷால் நடிக்கவிருந்த படம் எதிர்பாராத விதமாக நின்று போனது. இதனால் விஷ்ணுவை மட்டும் வைத்து தனது புதிய படத்தை சுசீந்திரன் தொடங்கியிருக்கிறார்.

இந்நிலையில் பார்த்திபன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கப் போவதாக கூறுகின்றனர். நானும் ரவுடிதான் படத்தில் ரவுடியாக பார்த்திபன் நடித்திருந்தார்.

இப்படத்தில் பார்த்திபனின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனால் இப்படத்திலும் காமெடி கலந்த வில்லன் வேடத்தில் பார்த்திபனை படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறுகின்றனர்.

மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்தபின், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Parthiban Play a Baddie in Suseenthiran's Next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil