»   »  'கன்னத்தில் முத்தமிட்டால்' புகழ் வாயாடி அமுதாவுக்கு டும் டும் டும்

'கன்னத்தில் முத்தமிட்டால்' புகழ் வாயாடி அமுதாவுக்கு டும் டும் டும்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம்.

சென்னை: பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணமாம்.

இயக்குனர், நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா. மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன் நடித்த கன்னத்தில் முத்திமிட்டால் படத்தில் அவர்களின் மகள் அமுதாவாக நடித்தார்.

அந்த படத்திற்காக கீர்த்தனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது.

இயக்கம்

இயக்கம்

கீர்த்தனா வளர்ந்த பிறகு ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது. ஆனால் அவரோ கேமராவுக்கு முன்பு அல்ல பின்னால் இருக்கவே ஆசைப்படுகிறேன் என்று கூறிவிட்டார்.

மணிரத்னம்

மணிரத்னம்

தனது நடிப்புத் திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய மணிரத்னத்திடமே கீர்த்தனா உதவி இயக்குனராக சேர்ந்தார். எந்த கிசுகிசுக்கள், சர்ச்சைகளில் சிக்காமல் இருந்து வருகிறார்.

மார்ச் 8

மார்ச் 8

கீர்த்தனாவுக்கு வரும் மார்ச் மாதம் 8ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கான அழைப்பிதழ்களை வழங்கும் வேலையில் பிசியாக உள்ளார் பார்த்திபன்.

பிரபலங்கள்

பிரபலங்கள்

கடந்த சில நாட்களாக பார்த்திபன் பிரபலங்களை சந்தித்து வருகிறார். அவர் எதற்காக அனைவரையும் சந்தித்து வருகிறார் என்பதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

English summary
Actor cum director Parthiban's daughter Keerthana is getting married on march 8 at Leela Palace in Chennai. Parthiban is busy inviting celebrities for the big day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil