Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடிதுள்..ரிலீசுக்கு முன்பே 3 சர்வேதச விருதுகளை அள்ளிய பார்த்திபனின் இரவின் நிழல்
சென்னை : நடிகரும் இயக்குனருமான பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் ஜூலை 15-ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.'உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்-லீனியர் படம்' என்ற பெருமையைப் பெற்ற இப்படத்தில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Recommended Video
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 6 பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆசியாவின் முதல் சிங்கிள் ஷாட் படம் என்பதால் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டில் இரவின் நிழல் இடம்பிடித்துள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
பட
ரிலீசிற்கு
முன்பே
இந்த
படம்
சர்வதேச
அளவில்
மூன்று
விருதுகளை
வென்றதுடன்,மேலும்
இரண்டு
விருதுகளுக்கு
பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது.
மூன்று
விருதுகளில்
இரண்டு
விருதுகள்
படத்தின்
ஒளிப்பதிவாளர்
ஆர்தர்
ஏ
வில்சனுக்கும்,
ஒன்று
படத்துக்கும்
கிடைத்துள்ளது.

வில்சன் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுகளை Cult Movies International film Festival மற்றும் Oniros Film Awards - New York ஆகியவற்றில் வென்றுள்ளார். அதே நேரத்தில் இரவின் நிழல் படத்துக்கான விருது Medusa திரைப்பட விழாவில் கிடைத்துள்ளது.
நியூயார்க் சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் ரோம் இன்டர்நேஷனல் மூவி விருதுகள் ஆகிய இரண்டு திரைப்பட விருதுகளுக்கும் இந்தத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைக் கொண்டாடும் வகையில், இரவின் நிழல் படத்தின் இசை முதல் சிங்கிள் விழாவை பார்த்திபன் சென்னையில் நடத்தினார்.
மதன் கார்க்கி எழுதி, ஸ்ரேயா கோஷல் பாடிய மாயவா தூயவா என்ற மெல்லிசைப் பாடலைத் தொடர்ந்து, ஏற்கனவே ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ள பாவம் செய்யாதிரு மனமே பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு புதன்கிழமை காலை வெளியிடுகிறது. ஆஸ்கார் விருது பெற்ற, Whiplash புகழ் கிரேக் மான் இந்த படத்தின் ஒலி வடிவமைப்பை செய்துள்ளார், மற்றொரு அகாடமி விருது வென்ற Cottalango Leon அதன் VFX மேற்பார்வையாளராக பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடுவெளி சித்தரின் பாடலை டி.வி.யில் கேட்டதாகவும், மிகவும் இருட்டாகவும், அழுத்தமாகவும் இருக்கும் இரவின் நிழல், படத்திற்கு இது சரியானதாக இருக்கும் என்றும் உணர்ந்ததாக தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அந்தப் பாடலை நிரஞ்சனா ரமணன் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன் ஆகியோர் பாடியுள்ளனர்.
இரவின் நிழல் படம் 50 வயது நபர் தனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையை ஒரே ஷாட்டில் படமாக்குவதற்காக, 64 ஏக்கர் நிலத்தில், பெரிய பட்ஜெட்டில், 50 செட்களை அமைத்ததாக பார்த்திபன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ஏ.ஆர்.
ரஹ்மான்
பணத்தை
எல்லாம்
எதிர்பார்க்கலைங்க..
இரவின்
நிழல்
மேஜிக்கை
சொல்லும்
பார்த்திபன்!