Just In
- 8 min ago
சாத்தானாக பெரியாரை சித்தரித்தாரா செல்வராகவன்? சர்ச்சையை கிளப்பிய பேட்டி.. மன்னிப்பு கேட்டு ட்வீட்!
- 12 min ago
ரம்யா பாண்டியன் மாதிரி.. ஒற்றை வேட்டி கட்டி.. கிறங்கடிக்கும் மோனிஷா
- 42 min ago
வேற லெவல் கங்கனா...மகளிர் தினத்தில் வெளியிடப்பட்ட தலைவி புரோமோ வீடியோ
- 1 hr ago
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா பாதிப்பு.. சீக்கிரம் குணமாக ரசிகர்கள் பிரார்த்தனை!
Don't Miss!
- Lifestyle
இந்த 6 ராசிகளில் பிறந்த பெண்கள் ஆபத்தான அதிபுத்திசாலிகளாக இருப்பார்களாம்... இவங்ககிட்ட உஷாரா இருங்க...!
- News
போச்சு.. "கைவிட்ட" பாஜக.. கருணை காட்டாத அதிமுக.. வெறுத்து போன விஜயகாந்த்.. வெளியேறிய தேமுதிக!
- Sports
அவர்கிட்ட இருந்து இளைஞர்கள் கத்துக்கனும்...கொஞ்சம் கூட பொறுமையை இழக்கல...யாரை பாராட்டுகிறார் லஷ்மண்
- Finance
7 ஆண்டுகளில் இருமடங்கு சிலிண்டர் விலை அதிகரிப்பு.. பெட்ரோல் டீசல் வரி வசூல் 459% அதிகரிப்பு..!
- Education
ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IARI நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Automobiles
மகளிர் தின ஸ்பெஷல்! பெண்களுக்கு பிடித்த கார்கள் எது?.. 50 பெண் பத்திரிக்கையாளர்கள் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தளபதி 65-ஐ இயக்குகிறாரா பார்த்திபன்? ரசிகர் கேட்ட கேள்வி.. நினைப்பது நடக்கும்.. என அட்டகாச ரிப்ளை!
சென்னை: நடிகர் விஜய்யின் 65வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற ஹைப் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.
இதுகுறித்து, ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இயக்குநர் பார்த்திபன், நீங்கள் நினைப்பது நடக்கும் என ரிப்ளை செய்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
மேலும், பார்த்திபன் - விஜய் காம்போ, சில படங்களில் மிஸ் ஆனது குறித்தும், தனது ட்வீட்டில் பார்த்திபன் தெரிவித்துள்ளது, விஜய் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இவரும் இறங்கிட்டார்ல.. ரெடியாகுது விவேக் நாயகனாக நடித்த படத்தின் 2 ஆம் பாகம்! அமெரிக்காவில் ஷூட்டிங்
|
ரசிகர் விருப்பம்
ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை தயாரித்து, இயக்கி, நடித்த நடிகர் பார்த்திபனுக்கு, ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் கதவுகள் வரை அந்த படத்திற்காக நடிகர் பார்த்திபன் தட்டி இருந்தார். இந்நிலையில், தற்போது, தளபதி 65 படத்தில் பார்த்திபனும், விஜய்யும் இணைந்தால் செம மாஸ் என ரசிகர் ஒரு ட்வீட் போட்டு இருக்கிறார்.
|
நினைச்சது நடக்கும்
அந்த ரசிகரின் ட்வீட்டுக்கு கீழே நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், "Massக்கு MASTER-ஐ பிடிக்கும், Masterக்கு இந்த நண்பனைப் பிடிக்கும்.('நண்பன்' படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார்-'அழகியத் தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார்) நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்!" என பதில் அளித்துள்ளார்.
|
இது தெரியாம போயிடுச்சே
நண்பன் படத்தை இயக்குநர் ஷங்கருக்கு முன்னதாக பார்த்திபனையே இயக்கச் சொன்னார் விஜய், மற்றும் அழகிய தமிழ் மகன் படத்திற்கு கதையை எழுதச் சொன்னார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் ஆச்சர்யத்தில் அவரது ட்வீட்டுக்கு கீழே கமெண்ட் செய்து வருகின்றனர்.
|
ஆஸ்கர் நிச்சயம்
தளபதி 65 படத்தை பார்த்திபன், இயக்கப் போகிறாரா? அல்லது அதில் விஜய்யுடன் இணைந்து நடிக்கப் போகிறாரா என சில குழப்பங்கள் எழுந்தாலும், பார்த்திபனின் இந்த அட்டகாசமான பதில், தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. தளபதியும், நீங்களும் இணைந்தால், ஆஸ்கர் நிச்சயம் என இந்த தீவிர ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.
|
ஒரே ட்வீட்டில் 3 ரகசியங்கள்
வித்தியாசமான படங்களில் எடுப்பது மட்டுமின்றி, வார்த்தை விளையாட்டு விளையாடுவதிலும், பார்த்திபன் சார் வித்தகர் தான். ஒரே ட்வீட்டில், மூன்று வெளிவராத ரகசியங்கள் வெளியாகி உள்ளன.. சார், நீங்க வேற லெவல், கண்டிப்பா தளபதி உடன் படம் பண்ணனும் என ரசிகர்கள் தங்களது ஆர்வத்தையும் விருப்பத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
|
நவயுக கல்கி
"வார்த்தைகளில் மாயக்கவர்ச்சியை உட்செலுத்தும் உம் வித்தைகளை எங்கே இனி காண்பேன் கவி மன்னா!! இது எப்படி சாத்தியம் நவயுக கல்கியே உங்களுக்கு அடைமொழி சூடலாமோ" என இந்த ரசிகர், இயக்குநர் பார்த்திபனை போல வார்த்தை ஜாலங்களால் கமெண்ட் செய்துள்ளார். உங்களுக்கும் லைக் கிடைக்கும் பாஸ்!