»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஓட்டுப் போட மறக்காதீர்கள். அதை அலட்சியப்படுத்தாதீர்கள். வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்துங்கள் என்றுதமிழக வாக்காளர்களுக்கு நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தின் அடுத்த தலைமைக்கு ஆள் காட்டப் போகும் விரல்களே, உங்களில் ஒருவனான இந்த இந்தியப்பிரஜையின் பணிவான வணக்கம்.

விடுமுறையாக இருந்தாலும் கூட எப்படி சுதந்திர தினத்தை ஒரு புனித தினமாக மதித்து, கொடியேத்தி சல்யூட்வைக்கிறோமோ அதே போலத்தான் இந்த தேர்தலும்.

இன்னொரு விடுமுறை நாளா இதை செலவு செய்யாம, நம்மோட உரிமையைப் பதிவு செய்ற தினமாக வரவுவைத்துக் கொள்ள வேண்டும்.

நமக்காக, வாக்களிப்போம். மூளைச் சலவை செய்யப்பட்ட நமது காதுகளை கழுவிப் காயப் போட்டு விட்டுசுயமாகச் சிந்தித்து வாக்களிப்போம்.

100 சதவீத வாக்குப்பதிவு என்பது 100 சதவீதம் அத்தியாவசியமாகிறது. சமுதாயத்தோடு நம்மை சம்பந்தப்படுத்திக்கொள்ளும் ஒரே அடையாளம் இந்த வாக்குப்பதிவு மட்டுமே என்று கூறியுள்ளார் பார்த்திபன்.

Read more about: actor chennai partiban vote

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil