»   »  முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!

முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எல்லா திறமையும் இருந்தும்... நல்ல நடிப்பு கைவந்த போதும்... ஏனோ சாந்தனுவுக்கு மட்டும் வெற்றித் திருமகள் பெரிதாக வாசல் திறக்கவில்லை என்பது திரையுலகினர் பலரும் உதிர்க்கும் கமெண்ட் இது.

இந்த ஆண்டு இந்த கமெண்ட் காணாமல் போய்விடும் என்கிறார்கள். காரணம் ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் வெளியீடாக வரும் பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக. இதில் சாந்தனுவுக்கு மிகச் சிறந்த வேடம் என்கிறார்கள்.


Party Song with 27 actors for Mupparimaanam

அடுத்து சாந்தனு நடித்துள்ள முப்பரிமாணம். இந்தப் படத்தை அதிரூபன் என்பவர் இயக்கியுள்ளார். இயக்குநர் பாலாவின் சிஷ்யர் இவர்.


கிஷோர், சிருஷ்டி டாங்கே, தம்பி ராமையா, அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.


முப்பரிமாணம் குறித்த அதிரூபன் கூறும்போது, "நம்முடைய வாழ்க்கையில் சரி, தவறு என இரு விஷயங்கள் இருக்கும். ஆனால், அதையும் தாண்டி அதனால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் படம்தான் 'முப்பரிமாணம்'.


இப்படத்தில் சாந்தனு இரண்டு, மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். சாந்தனுவை, இந்த படத்தில் வேறு விதமாக பார்க்கலாம். இந்த படத்திற்காக அவர் ரொம்பவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார். அவர் ஒரு நடிகராக மட்டுமில்லாமல், ஒரு டெக்னிஷியனாகவும் கீழே இறங்கி வேலைப் பார்த்தார்.


இதுவரை துறுதுறுவென கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிருஷ்டி டாங்கே, இப்படத்தில் பெரிய நடிகைகள் செய்ய வேண்டிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.


இப்படத்தில் ஒரு பார்ட்டி சாங் ஒன்றை ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த பாடலுக்காக கிட்டத்தட்ட 3 மாத காலம் நேரம் ஒதுக்கி, நிறைய டியூன்களை போட்டு கடைசியில் ஒன்றைத் தேர்வு செய்தோம். இந்த பாடலில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், கே.பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன், பார்த்திபன், ராதிகா சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ், விவேக், ஆர்யா, விஜய் ஆண்டனி, சூரி, பிரசன்னா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட 27 நடிகர்களை ஒன்று சேர்த்து படத்திற்காக புரோமோ சாங் ஒன்றை உருவாக்கியுள்ளோம்," என்றார்.


படத்துக்கு யு சான்று கிடைத்துள்ளது. பிப்ரவரி கடைசியில் முப்பரிமாணம் வெளியாகிறது.

English summary
After Koditta Idangalai Nirappuga, Santhanu is playing lead role in another movie titled Mupparimaanam.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil