Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பருத்திவீரன் டாஸ்க்... பஞ்சை வைத்து தலைவரை தேர்வு செய்ய சொன்ன பிக்பாஸ்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று 50 வது நாளை அடைந்துள்ளது. இதுவரை 6 பேர் வெளியேறி உள்ளனர். 12 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். வைல்ட்கார்ட் என்ட்ரியாக அபிஷேக் ராஜா மீண்டும் வந்துள்ளார்.
அடுத்த
பிரம்மாண்டம்...குக்
வித்
கோமாளி
3
க்கு
தயாராகும்
விஜய்
டிவி
இன்றைய 50 வது நாளில் இரண்டாம் வைல்ட்கார்டு என்ட்ரியில் மற்றொரு பிரபலம் வீட்டிற்குள் செல்ல உள்ள கூறப்படுகிறது. இருந்தாலும் இரண்டாவது வைல்ட்கார்டு என்ட்ரி உண்டா, இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை.

பருத்தி வீரன் டாஸ்க்
பிக்பாஸ் சீசன் 5 ன் எட்டாவது வாரத்தின் முதல் நாளான இன்று, துவக்கத்திலேயே இந்த வார வீட்டின் தலைவரை தேர்வு செய்வதற்கான டாஸ்க் நடத்தப்பட்டது. பருத்தி வீரன் என இந்த டாஸ்கிற்கு பெயரிடப்பட்டது. கடந்த வாரம் நடத்தப்பட்ட உள்ளதை காட்டும் கண்ணாடி டாஸ்கில் வெற்றி பெற்ற 6 பேர் இந்த டாஸ்கில் பங்கேற்பார்கள் என பிக்பாஸ் கூறி இருந்தார்.

பஞ்சை வைத்து போட்டி
இதன்படி ராஜு, தாமரை, வருண், இமான் அண்ணாச்சி, அக்ஷரா, அபினய் ஆகிய 6 பேர் இந்த தலைவருக்கான டாஸ்கில் போட்டியிட்டனர். இந்த டாஸ்கில் கார்டன் ஏரியாவில் பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்தன. போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பெட்டி வழங்கப்பட்டது. டாஸ்க் பஸர் அடித்ததும், போட்டியாளர்கள் தங்களின் பெட்டிகளில் பஞ்சை முடிந்த அளவிற்கு நிரப்ப வேண்டும்.

முத்திரை குத்தப்பட்ட நபர்
அந்த சுற்றில் பஞ்சுகளின் எடையின் அடிப்படையில் போட்டியாளர்கள் வரிசைபடுத்தப்பட்டு, குறைந்த அளவிலான பஞ்சு வைத்திருக்கும் இரண்டு நபர்களை தேர்வு செய்ய வேண்டும். அவர்களின் யாருக்கு தலைவராக தகுதியில்லை என மற்ற ஹவுஸ்மேட்கள் பேசி முடிவு செய்து, அவர்களுக்கு கிடைக்கும் ஆதரவின் அடிப்படையில், குறைந்த ஆதரவை பெற்ற நபர், ரிஜக்டட் என முத்திரை குத்தி வெளியேற்றப்படுவார்.

மேலாளரான நிரூப்
இந்த முறை ஒவ்வொரு சுற்றுக்களாக நடத்தப்படும். இறுதி வரை யார் நிலைத்து நிற்கிறாரோ அவரே இந்த வார தலைவராக தேர்வு செய்யப்படுவார் என பிக்பாஸ் தெரிவித்தார். இதற்கு எடை மேலாளராக நிரூப் இருப்பார் என கூறப்பட்டது.

பிரியங்கா – தாமரை மோதல்
இந்த டாஸ்கின் முதல் சுற்றிலேயே தாமரை வெளியேற்றப்பட்டார். தாமரை தலைவராவதற்கு பிரியங்கா நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தார். அதே சமயம் மற்றவர்கள் தாமரைக்கு ஆதரவு அளித்தனர். தலைவராக உனக்கு தகுதியில்லை என பிரியங்கா நேரடியாக சொன்னதால், தாமரை - பிரியங்கா இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது.