»   »  இந்த வயசுல இது தேவையா சர்ச்சை: ஒரு வழியாக மவுனம் கலைத்த மம்மூட்டி

இந்த வயசுல இது தேவையா சர்ச்சை: ஒரு வழியாக மவுனம் கலைத்த மம்மூட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தன்னை விளாசிய நடிகை பார்வதிக்கு கொலை மிரட்டல், பலாத்கார மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து மவுனம் கலைத்துள்ளார் மம்மூட்டி.

கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய நடிகை பார்வதி கசாபா படத்தில் மம்மூட்டி பெண்களுக்கு எதிராக பேசியுள்ளது வருத்தம் அளிக்கிறது. பெரிய ஸ்டாராக இருந்து கொண்டு இந்த வயதில் இப்படி செய்யலாமா என்று கேட்டார்.

இதையடுத்து மம்மூட்டியின் ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்தனர், கலாய்த்தனர்.

பார்வதி

பார்வதி

மம்மூட்டியை பற்றி பேசியதற்காக பார்வதிக்கு கொலை மிரட்டல், பலாத்கார மிரட்டல் எல்லாம் விடுக்கப்பட்டது. இத்தனை நடந்தும் மம்மூட்டி வாய் திறக்காமல் அமைதியாக இருந்தார்.

கைது

கைது

சமூக வலைதளங்களில் ஓவராக பேசியவர்கள் மீது பார்வதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை 2 பேரை கைது செய்துள்ளனர்.

பேட்டி

பேட்டி

இறுதியாக மம்மூட்டி மவுனம் கலைத்துள்ளார். பார்வதி விஷயம் பற்றி அவர் மலையாள மீடியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, பார்வதி ஏற்கனவே என்னிடம் பேசிவிட்டார். இந்த சர்ச்சைகளை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அவருக்கு ஆறுதல் கூறினேன். என் சார்பில் பேசுமாறு நான் யாரையும் கேட்டுக் கொள்ளவில்லை என்றார்.

பரவாயில்லை

பரவாயில்லை

இந்த விஷயத்தில் மம்மூட்டி இஷ்டத்திற்கே விட்டுவிடுகிறேன். அவர் ஆரம்பத்திலேயே பேசியிருக்க வேண்டும். தற்போது விளக்கம் அளித்தது பரவாயில்லை என பார்வதி தெரிவித்துள்ளார்.

English summary
Mammootty opened up that Parvathy had informed about the controversy to him earlier itself. He had consoled her and asked her not to take these controversies seriously and added that it is a custom to drag celebrities to controversies like these.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X