»   »  24ம் புலிகேசி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாகும் அஜீத் ஹீரோயின்

24ம் புலிகேசி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாகும் அஜீத் ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக அஜீத் பட நாயகி நடிக்கிறார்.

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலுவின் அசத்தல் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. 11 ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கிறார்கள்.

Parvathy Omanakuttan to romance Vadivelu

இரண்டாம் பாகத்திற்கு இம்சை அரசன் 24ம் புலிகேசி என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் லைக்கா நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கிறார்.

24ம் புலிகேசி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன் நடிக்கிறார். பில்லா 2 படத்தில் அஜீத் ஜோடியாக நடித்தவர் பார்வதி என்பது குறிப்பிடத்தக்கது.

Parvathy Omanakuttan to romance Vadivelu

படத்திற்கு கிப்ரான் இசையமைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Parvathy Omanakuttan is acting as Vadivelu's love interest in Imsai Arasan 24th Pulikesi to be directed by Chimbudevan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil