அந்த படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது...மிஸ் பண்ணிட்டேன்...இப்போ வருத்தப்படும் நடிகை

சென்னை : அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பார்வதி நாயர். பிரபல மாடலும், நடிகையுமான இவர் இன்ஸ்டாகிராமில், Ask Me Anything நிகழ்ச்சியில் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதில் அழகை பராமரிக்க தான் வழக்கமாக செய்வது, ஃபிட்னஸ் ரகசியங்கள், படங்கள் போன்ற ரசிகர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். பார்வதியின் மனம் திறந்த பதில்களால் குஷியான ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர்.

அர்ஜுன் ரெட்டியை மிஸ் பண்ணிட்டிங்களா

அர்ஜுன் ரெட்டியை மிஸ் பண்ணிட்டிங்களா

அப்போது ஒருவர், விஜய் தேவரகொண்டா நடித்த பிளாக்பஸ்டர் படமான அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க உங்களிடம் தான் முதலில் கேட்கப்பட்டதாமே. நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பதால் நீங்கள் அதை மறுத்து விட்டீர்களாமே உண்மையா?

இப்போ வருத்தப்படுறேன்

இப்போ வருத்தப்படுறேன்

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்காமல் வாய்ப்பை நழுவ விட்டதை நினைத்து தற்போது வருத்தப்படுகிறீர்களா என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பார்வதி, அது உண்மை தான். அது அழகான படம். நான் அதை மிஸ் பண்ணிருக்க கூடாது.

பார்வதியின் நம்பிக்கை

பார்வதியின் நம்பிக்கை

ஆனால் எனக்கானது என்னை தேடி வரும் என நம்பினேன். அதனால் அழகான படங்கள் என்னை தேடி வரும் என கண்டிப்பாக தெரியும் என்றார். பார்வதியின் இந்த நேர்மையான பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதுக்கு மட்டும் நோ பதில்

இதுக்கு மட்டும் நோ பதில்

பல கேள்விகளுக்கு பதிலளித்தாலும் தான் அடுத்து நடிக்கும் ஆலம்பனா படம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் மறுத்து விட்டார். அதற்கு பதிலளிக்க தனக்கு இன்னும் சில காலம் ஆகும் என கூறி விட்டார். இந்த படத்தில் வைபவிற்கு ஜோடியாக பார்வதி நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X