»   »  பசங்க 2 படமல்ல பெற்றோர்களுக்கான பாடம்... அன்லிமிடெட் லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்

பசங்க 2 படமல்ல பெற்றோர்களுக்கான பாடம்... அன்லிமிடெட் லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா, அமலாபால், பிந்து மாதவி மற்றும் ஏராளமான குழந்தைகளின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் பசங்க 2 சமூக வலைதளங்களில் தொடர்ந்து லைக்ஸ்களை குவித்துக் கொண்டிருக்கிறது.

படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். எந்தவிதமான எதிர்மறையான விமர்சனங்களும் படத்திற்கு இதுவரை வரவில்லை என்பது பசங்க 2 வின் மிகப்பெரிய பலமாக மாறியிருக்கிறது.


இந்த வருடத்தில் கடைசியாக வெளியாகி இருக்கும் பசங்க 2 படம் குறித்து ரசிகர்களின் 'லைவ்'வான கருத்துகளை இங்கே காணலாம்.


ஆராவாரம்

"ஆராவாரம் இன்றி பசங்க 2 ஆர்ப்பரிக்கிறது" என்று படத்தைப் பற்றி ஒரே வரியில் கூறியிருக்கிறார் மொகமத் ஜாபர்.


வசனங்கள்

"குழந்தைங்க எப்பவுமே கெட்ட வார்த்தை பேசமாட்டாங்க...கேட்ட வார்த்தையை தான் பேசுவாங்க"..என்று படத்தின் வசனத்தைப் பாராட்டி இருக்கிறார் தூத்துக்குடிகாரன்.


அழகான முதல் பாதி

"பசங்க 2 அழகான முதல் பாதி. அந்த குழந்தைகள் பிரியத்திற்குரியவர்களாக இருக்கின்றனர். நீங்கள் உங்கள் குழந்தைகளை திறந்த மனதுடன் இந்தப் படத்திற்கு கூட்டிச் செல்லலாம். படம் உண்மையிலேயே சூப்பர்" என்று படத்தைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் மொகமது சுஹோர்.


சூர்யா

"சூர்யா இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். குழந்தைகளை ஈர்க்கக் கூடிய அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கின்றன. குறிப்பாக கிளைமாக்ஸ் வசனங்கள் அதி உயர்வாக இருந்து நம்மை ஈர்க்கின்றன" தினேஷின் பதிவிது.


பாராட்டுக்கள்

"இப்படி ஒரு படத்தைத் தயாரித்ததற்காக உங்களைப் பாராட்டுகிறேன் சார். குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் பார்க்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்" என்று படத்தின் தயாரிப்பாளர் சூர்யாவைப் பாராட்டி இருக்கிறார் விஷ்ணு வர்தன் ரெட்டி.


ஒரு அழகான முடிவு

"2015 பசங்க 2 என்ற அழகான படத்துடன் முடிவடைகிறது" என்று ஒரே வரியில் நச்சென்று படம் குறித்து பதிவிட்டிருக்கிறார் சூரின்.


மொத்தத்தில் குழந்தைகளுடன் பெற்றோர்களும் பார்க்க வேண்டிய தரமான படம் என்பதே, படத்தைப் பார்த்த ஒட்டுமொத்த ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
English summary
Surya, Amala Paul and more than 20 kids Starrer Pasanga 2 Released Today Worldwide - Audience Live Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil