»   »  பசங்க 2, பூலோகம்: 2015ஐ வெற்றிகரமாக 'முடித்து' வைத்த ஜெயம் ரவி, சூர்யா!

பசங்க 2, பூலோகம்: 2015ஐ வெற்றிகரமாக 'முடித்து' வைத்த ஜெயம் ரவி, சூர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2015 ம் ஆண்டின் இறுதியில் நேற்று வெளியான பூலோகம் மற்றும் பசங்க 2 படத்தின் மூலமாக வெற்றியை ருசிபார்த்து இருக்கின்றனர் ஜெயம் ரவி, சூர்யா இருவரும்.

இந்த 2015 தமிழ் சினிமாவிற்கு மாபெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய ஆண்டாக அமைந்திருக்கிறது. இந்த வருடத்தில் வெளியான படங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200 ஐ எட்டிப்பிடிதது.


ஆனால் இதில் வெற்றி பெற்ற படங்களின் எண்ணிகையை விரல் விட்டுத்தான் எண்ண வேண்டியிருந்தது. சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாயகர்களின் படங்கள் கூட மண்ணைக் கவ்வின.


Pasanga 2, Bhooloham very well in Tamilnadu Box Office

இந்த நிலையில் இந்த ஆண்டின் கடைசிப் படங்களாக நேற்று வெளியான பூலோகம், பசங்க 2 படங்கள் வெற்றிப் படங்களாக மாறி 2015ன் இறுதியை வெற்றிகரமாக முடித்து வைத்துள்ளன.


ஆண்டின் நடுவில் வெளியான மாசு என்கிற மாசிலாமணி படம் சூர்யாவிற்கு தோல்வியைப் பரிசளித்த நிலையில், அதனை மறக்கும் விதமாக அமைந்திருக்கிறது பசங்க 2 படத்தின் வெற்றி.


இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் குடும்பத்துடன் தாராளமாக பார்க்கலாம் என்று ஸ்டேட்டஸ் தட்டியதில் தற்போது குடும்பம், குடும்பமாக மக்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.


இதே போன்று ஜெயம் ரவியின் பூலோகம் படமும் ரசிகர்களைக் கவர்ந்து இருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 2015 ம் ஆண்டின் ஹாட்ரிக் நாயகன் பட்டத்தை அசால்ட்டாக தட்டிச் சென்றிருக்கிறார் ஜெயம் ரவி.


வருகின்ற பொங்கல் பண்டிகை வரை வேறு பெரிய படங்கள் எதுவும் இல்லாததால் பசங்க 2, பூலோகம் இரண்டும் வசூலில் புதிய சாதனையைப் படைக்கும் என்பது தியேட்டர் அதிபர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் கருத்தாக இருக்கிறது.


மொத்தத்தில் தங்களது படங்களின் மூலம் ஆண்டு இறுதியை வெற்றியுடன் முடித்து வைத்திருக்கின்றனர் ஜெயம் ரவி, சூர்யா இருவரும்!

English summary
Surya's Pasanga 2 and Jayam Ravi's Bhooloham Released on Yesterday. Both Movies now Good Start in Taminadu Box Office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil