»   »  10 வயதுக்குட்பட்டோருக்கு பசங்க 2 பார்க்க இலவச அனுமதி!

10 வயதுக்குட்பட்டோருக்கு பசங்க 2 பார்க்க இலவச அனுமதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலா பால், பிந்து மாதவி மற்றும் குழந்தைகள் பலரும் நடித்துள்ள பசங்க 2 படத்தை பத்து வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகள் இலவசமாகப் பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர்.

படங்க 2 படம் இரு வாரங்களுக்கு முன்பு வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


இதற்காக 2டி எண்டர்டெயிண்மென்ட் சார்பாக, பாண்டிராஜுக்கு கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார் சூர்யா.


Pasanga 2 free for children below 10

படத்துக்கு மேலும் கூட்டம் வருவதற்காக புதுச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பசங்க 2 படத்தைப் பார்க்க வருகிற 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் அவர்கள் இந்தப் படத்தை தனியாகவோ அல்லது பெற்றோர்களுடனோ வந்தால் இலவசமாகப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சலுகை கோவை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்னாற்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எல்லாம் சரிதான்.... ஆனால் பசங்க 2வில் பாடம் கற்க வேண்டியது பெற்றோர்தான் என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். நியாயமாக பெற்றோருக்கல்லவா இந்த சலுகை தந்திருக்க வேண்டும்?!

English summary
Actor Surya has announced free tickets for children below 10 to watch Pasanga 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil