»   »  இது சூர்யா படமல்ல... பசங்க படம்! - பாண்டிராஜ்

இது சூர்யா படமல்ல... பசங்க படம்! - பாண்டிராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பசங்க 2 படத்தை சூர்யா படம் என எதிர்ப்பார்த்து வரவேண்டாம். இது குழந்தைகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படம் என்று இயக்குநர் பாண்டிராஜ் கூறினார்.

பசங்க படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பாண்டிராஜ், வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களுக்கு பிறகு சூர்யா தயாரிப்பில் பசங்க 2 (ஹைக்கூ) என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவும் நடித்துள்ளார்.


Pasanga 2 is not Surya movie

இப்படம் பற்றி பேசிய பாண்டிராஜ், "பசங்க 2 (ஹைக்கூ) படம் என்னுடைய வாழ்க்கை. அதனால் தான் இந்த படத்தை இயக்குவதற்கு எனக்கு சுலபமாக இருந்தது. குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பதை குறித்துதான் இந்த படம். நகரத்தில் வளரும் குழந்தைகளுக்கும், கிராமத்தில் வளரும் குழந்தைகளும் பார்க்க கூடிய ஒரு படமாக உருவாகியிருக்கு.


Pasanga 2 is not Surya movie

இந்த படத்தில் ஒரு பெரிய டுவிஸ்ட் எதுவும் இல்லை. குழந்தைகளுடைய வாழ்க்கை அப்படியே இந்த படத்தில் வந்திருக்கிறது. இந்த படத்தினுடைய கதை முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாக அமைந்திருக்கிறது. அதனால தயவு செய்து இது சூர்யா படமாக நினைத்து படம் பார்க்க வேண்டாம். நிச்சயம் சூர்யா வந்து போகிறவராக இல்லாமல் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்," என்றார்.


விஷாலை வைத்து பாண்டிராஜ் இயக்கிய புதிய படம் கதகளி வரும் பொங்கலுக்கு வெளியாகிறது!

English summary
Director Pandiraj says that his Pasanga 2 is not a heroic movie.. It is reflecting the life of children.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil