»   »  டிசம்பர் 4ல் வெளியாகிறது பாண்டிராஜ் - சூர்யாவின் பசங்க 2

டிசம்பர் 4ல் வெளியாகிறது பாண்டிராஜ் - சூர்யாவின் பசங்க 2

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பசங்க 2 படத்தை டிசம்பர் மாதம் 4ம் தேதி வெளியிடப் போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.

சூர்யா, அமலாபால், பிந்து மாதவி மற்றும் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பசங்க 2. முதலில் ஹைக்கூ என்று பெயர் வைத்து பின்னர் பசங்க 2 என்று படத்தின் பெயரை மாற்றி வைத்தனர்.


Pasanga 2 Release Date Here

பசங்க படத்தைப் போன்று முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி எடுத்திருக்கும் இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜுடன் இணைந்து நடிகர் சூர்யா தயாரித்து இருக்கிறார்.


பாண்டிராஜ் மற்றும் சூர்யா மீதுள்ள நம்பிக்கையால் இப்படத்தை வாங்கி வெளியிடும் உரிமையை ஸ்டுடியோ கிரீன் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.


இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் எல்லாம் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை வருகிற டிசம்பர் 4-ம் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


இந்நிலையில் பசங்க 2 படத்தினை டிசம்பர் மாதம் 4-ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

English summary
Sources Said Surya, Amala Paul and Bindu Madhavi Starrer Pasanga 2 Movie will be Released on Next Month December 4.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil