»   »  பசங்க 2 வெற்றி - பாண்டிராஜ்க்கு சூர்யா வழங்கிய பரிசு

பசங்க 2 வெற்றி - பாண்டிராஜ்க்கு சூர்யா வழங்கிய பரிசு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பசங்க 2 வெற்றிப் படமாக மாறியதில் மகிழ்ந்து போன சூர்யா இயக்குநர் பாண்டிராஜ்க்கு கார் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்.

சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்து வெளியிட்ட பசங்க 2 திரைப்படம் 2015ன் வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது.


மேலும் விமர்சகர்கள், ரசிகர்களாலும் இந்தப் படம் பெரிதும் பாராட்டப்பட்டது. குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தாலும் வசூலில் இப்படம் எந்தக் குறையும் வைக்கவில்லை.அஞ்சான், மாசு படங்களால் நொந்து போயிருந்த சூர்யாவிற்கு பசங்க 2 திரைப்படம் பெரிதும் ஆறுதல் தந்திருக்கிறது. தற்போது இந்த வெற்றியால் மகிழ்ந்து போன சூர்யா இயக்குநர் பாண்டிராஜ்க்கு 'சுசுகி எஸ் கிராஸ்' கார் ஒன்றினை பரிசாக அளித்திருக்கிறார்.


இந்தப் பரிசினை சூர்யாவின் சார்பில் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிர்வாகத் தயாரிப்பாளர் ராஜசேகரபாண்டியன் இயக்குநர் பாண்டிராஜ்க்கு வழங்கியிருக்கிறார்.


அடுத்தடுத்து வரிசையாக கதகளி மற்றும் இது நம்ம ஆளு ஆகிய படங்களும் வெளியாக இருப்பதால் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் பாண்டிராஜ்.


சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் பசங்க 2 எனினும் சில தாமதங்களால் 36 வயதினிலே படம் சூர்யாவின் முதல் தயாரிப்பாக மாறிவிட்டது.


தனது நிறுவனத்தின் மூலம் தயாரித்த 2 படங்களும் வெற்றிப் படங்களாக மாறியதில் சூர்யா தற்போது பழைய உற்சாக நிலைக்கு திரும்பியிருக்கிறார்.


சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து சூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் எஸ் 3 படப்பிடிப்பிற்காக சூர்யா தற்போது விசாகப்பட்டினம் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Pasanga 2 to Become a Successful Movie, now Surya has Gifted a Maruti Suzuki S- Cross car to Director Pandiraj.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil