»   »  'பசங்க' பட ஜீவா நித்யானந்தத்தின் தம்பி விபத்தில் சிக்கி பலி

'பசங்க' பட ஜீவா நித்யானந்தத்தின் தம்பி விபத்தில் சிக்கி பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பசங்க படத்தில் ஜீவாவாக நடித்த ஸ்ரீராமின் தம்பி விபத்தில் சிக்கி பலியானார்.

பாண்டிராஜின் பசங்க படத்தில் ஜீவா நித்யானந்தமாக நடிப்பில் அசத்தியவர் ஸ்ரீராம். அவர் தமிழ் படம், ஜில்லா, கோலிசோடா, பாபநாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Pasanga actor's brother passed away in bike accident

ஸ்ரீராமின் தம்பி அர்ஜுன் ராம். அவர் கடந்த 3ம் தேதி பைக்கில் சென்ற அவர் விபத்தில் சிக்கி பலியானார். அர்ஜுன் ராமுக்கு எடிட்டிங் செய்வது, புகைப்படம் எடுப்பது என்றால் மிகவும் பிடிக்குமாம்.

அர்ஜுனின் மரணத்தால் ஸ்ரீராமின் குடும்பத்தார் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அர்ஜுன் பார்ப்பதற்கு ஸ்ரீராம் போன்றே இருந்தார். அவரும் அண்ணனை போன்று சினிமாவில் பிரபலம் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அர்ஜுனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு திரையுலக பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

English summary
Pasanga actor Sriram's younger brother Arjun Ram was killed in a road accident.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil