»   »  "ரோசனை மஞ்சுவாண்டு"தான் செந்தில்குமாரி என்ன பண்ணிட்டிருக்காங்க தெரியுமா?

"ரோசனை மஞ்சுவாண்டு"தான் செந்தில்குமாரி என்ன பண்ணிட்டிருக்காங்க தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'பசங்க' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் செந்தில்குமாரி. அந்தப் படத்திற்குப் பிறகு 'பசங்க செந்தி' என்றே அழைக்கப்பட்டார்.

தனது கீச்சுக் குரல் யதார்த்த நடிப்பால் தொடர்ந்து அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வருகிறார். தற்போது 'மெர்சல்', 'மதுர வீரன்', 'சர்வர் சுந்தரம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.

இந்நிலையில், சின்னத்திரை தொலைக்காட்சித் தொடரில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் செந்தி. விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி தொடரில் செல்லமான அம்மா மற்றும் மாமியாராக நடித்து வருகிறார்.

சினிமாவிலும் பிசிதான்

சினிமாவிலும் பிசிதான்

டி.வி சீரியலில் நடிப்பது பற்றி, "இப்போதும் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சரவணன் மீனாட்சி தொடர் எனக்கு மிகவும் பிடிக்கும்.

வற்புறுத்திக் கொண்டே இருந்தார்

வற்புறுத்திக் கொண்டே இருந்தார்

அதன் இயக்குனருக்கு போன் செய்து ஒரு நாள் பாராட்டினேன். அதிலிருந்து அவரும் நீங்களும் நடிங்களேன் என்ற வற்புறுத்திக் கொண்டே இருந்தார், மறுத்து வந்தேன்.

பார்ப்போமே

பார்ப்போமே

தொடர் வற்புறுத்தலால் நடித்துத்தான் பார்ப்போமே என்று நடிக்க ஆரம்பித்து விட்டேன். சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை.

சினிமாதான் முக்கியம்

சினிமாதான் முக்கியம்


ஆனால் எனக்கு சினிமாதான் முக்கியம். சரவணன் மீனாட்சிக்குப் பிறகு தொடர்ந்து சீரியலில் நடிக்கும் ஐடியா எதுவும் இப்போதைக்கு இல்லை" என்கிறார் செந்தி.

Read more about: pasanga, serial, பசங்க
English summary
'Pasanga' fame senthilkumari turns as a tv actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil