»   »  தனுஷ் 'யார் மகன்' என்ற வழக்கை நினைத்து கவலை இல்லை, ஏன் என்றால்...: கஸ்தூரி ராஜா

தனுஷ் 'யார் மகன்' என்ற வழக்கை நினைத்து கவலை இல்லை, ஏன் என்றால்...: கஸ்தூரி ராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் என் மகன் தான் என்பது எங்களுக்கு நன்கு தெரியும் என்பதால் திருப்புவனம் தம்பதி தொடர்ந்துள்ள வழக்கை நினைத்து கவலை இல்லை என இயக்குனர் கஸ்தூரிராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் தனுஷ் நேரில் ஆஜரானார். அப்போது அவரின் அங்க அடையாளங்கள் சரி பார்க்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தனுஷ்

தனுஷ்

தனுஷ் எங்கள் மகன் என்று அந்த தம்பதி தொடர்ந்துள்ள வழக்கில் உ ண்மை இல்லை. அதனால் அந்த வழக்கை நினைத்து எங்களுக்கு கவலை இல்லை என தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.

சட்டம்

சட்டம்

தனுஷ் எங்கள் மகன் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். அதனால் அந்த வழக்கை நினைத்து டென்ஷன் ஆகாமல் சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம் என்கிறார் கஸ்தூரி ராஜா.

சினிமா

சினிமா

நான் 1991ம் ஆண்டு சினிமா பயணத்தை துவங்கினேன். அதில் இருந்து என் குடும்பத்தார் பற்றி அனைவருக்கும் தெரியும். அதனால் தனுஷ் என் மகன் என நீதிமன்றத்தை தவிர யாருக்கும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை என கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.

ஆவணங்கள்

ஆவணங்கள்

நாங்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்கள். அந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்துவிட்டோம் என்ற கஸ்தூரி ராஜா தனுஷ் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவாரா என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

English summary
Director Kasthuri Raja said that he is not upset about Dhanush's paternity case as he knows that Thiruppuvanam couple's claim is not true.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil