Don't Miss!
- News
நாங்கள் வாரிசுகள் தான்.. ஆனால், எதற்கு தெரியுமா? - லிஸ்ட் போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Automobiles
டாடாவின் இந்த கார் மாடல்களில் பெட்ரோல் தேர்வை வாங்க முடியாது.. டீசலில் மட்டுமே கிடைக்கும்! இது ஏன் தெரியுமா?
- Lifestyle
Today Rasi Palan 26 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது...
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்த பதான்... வெறித்தனமான கம்பேக் கொடுத்த ஷாருக்கான்
மும்பை: ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் நேற்று முதல் உலகம் முழுவதும் வெளியானது.
பான் இந்திய படமாக ரிலீஸான பதானில், ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் ஆகியோருடன் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானின் திரைப்படம் வெளியாவதால் அவரது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
இதனிடையே பதானுக்கு எதிராக பாய்காட் பிரசாரமும் செய்யப்பட்ட நிலையில், பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்டமான வசூல் சாதனை படைத்துள்ளது இந்தப் படம்.
Pathaan Review: உங்க சீட் பெல்ட்டை போட்டுக்கோங்க.. ஷாருக்கானின் பதான் விமர்சனம் இதோ!

ஷாருக்கானின் பதான்
ஷாருக்கான் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படங்கள் வெளியாகவில்லை. இதனால் அவர் நடித்துள்ள பதான் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பதான் நேற்று வெளியானது. ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோனேவும், வில்லனாக ஜான் ஆப்ரஹாமும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் 'பேஷ்ரம் ரங்' பாடலில், தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி அணிந்திருந்தது கடும் சர்ச்சையாகிருந்தது.

கேமியோ ரோலில் சல்மான் கான்
காவி பிகினி சர்ச்சையை கையிலெடுத்த பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் பதான் படத்துக்கு எதிராக பாய்காட் பிரசாரத்தை தொடங்கினர். இதனால் பதான் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், எதிர்பார்த்ததை விட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சல்மான் கானும் கேமியோர் ரோலில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதனால் பதான் படத்திற்கு முதல் நாளிலேயே நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

புஷ்வானமான பாய்காட் பிரசாரம்
பாய்காட் பதான் என்ற ஹேஷ்டேக் எல்லாவற்றையும் பொய்யாகிய ரசிகர்கள், ஷாருக்கானுக்கு பிளாக் பஸ்டர் ஹிட்டை பரிசாக கொடுத்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், ஷாருக்கான் கேரியரில் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. கடந்த வருடத்தில் பாய்காட் செய்யப்பட்ட இந்தி படங்கள் அனைத்தும் படுதோல்வியடைந்த நிலையில், பதான் வேறலெவலில் சம்பவம் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை
பதான் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் மட்டுமே 25 கோடி ரூபாய்க்கும் மேல் என சொல்லப்பட்டது. இந்நிலையில், முதல் நாளில் 55 முதல் 60 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது இந்தி திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய சாதனை எனவும் சொல்லப்படுகிறது. மேலும், தொடர்ந்து விடுமுறை தினங்கள் இருப்பதால் முதல் வாரம் முடிவில் 150 முதல் 200 கோடி வரை வசூலித்துவிடும் எனவும் உறுதியாகக் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் முதல் இரண்டு வாரங்கள் இதே வசூல் நிலவரம் இருந்தால், பதான் தான் 2023ம் ஆண்டின் முதல் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.