twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒன்றியத்தின் தப்பால.. இல்லையப்பா படத்துல.. பயந்துவிட்டாரா கமல்.. அப்புறம் அந்த கெட்ட வார்த்தை?

    |

    சென்னை: கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் திங்கட்கிழமையான இன்று பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளோடு ஓடி வருகிறது.

    தமிழ்நாடு முழுவதும் 80 சதவீதம் புக்கிங் உடன் வார நாட்களில் படம் ஓடினால் இரண்டாம் வார இறுதியில் 300 கோடி வசூலை அழகாக தட்டித் தூக்கிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    வசூல் ரீதியாக படம் மாஸ் காட்டி வரும் நிலையில் ரசிகர்கள் "பத்தல பத்தல" பாடல் ஏன் பாதிக்கு மேல் காணோம் என்றும் குறிப்பாக அந்த வரிகள் இடம்பெறவில்லையே என கேள்விகளையும் எழுப்பி உள்ளனர்.

    விக்ரம் படத்தில் மிஸ் ஆன விஷயங்கள்...இதையெல்லாம் யாராவது கவனிச்சீங்களா? விக்ரம் படத்தில் மிஸ் ஆன விஷயங்கள்...இதையெல்லாம் யாராவது கவனிச்சீங்களா?

    ஒன்றியத்தின் தப்பாலே

    ஒன்றியத்தின் தப்பாலே

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன் மற்றும் சூர்யா நடிப்பில் கடந்த ஜூன் 3ம் தேத் வெளியான விக்ரம் திரைப்படத்தில் அனிருத் இசையில் கமல் எழுதி பாடிய ‘பத்தல பத்தல' பாடலில் இடம்பெற்றிருந்த "ஒன்றியத்தின் தப்பாலே.. ஒண்ணும் இல்ல இப்பாலே" வரிகள் பெரும் சர்ச்சையை கிளப்பின. அந்த வரிகளுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது.

    படத்தில் கட்

    படத்தில் கட்

    படத்தில் அந்த வரிகளுக்கு கமல் எப்படி ரியாக்‌ஷன் கொடுத்து இருக்கிறார் என்பதை காண ஆர்வத்துடன் பலர் எதிர்பார்த்திருந்த நிலையில், விக்ரம் படம் ஆரம்பித்ததும் டைட்டில் கார்டு ஓடும் போதே அந்த பாடலும் ஓடுகிறது. ஆனால், பாதி பாடலிலேயே, அந்த சர்ச்சைக்குரிய வரிகள் வருவதற்கு முன்னதாகவே பாடல் முடிவடைந்து ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.

    பயந்துவிட்டாரா கமல்

    பயந்துவிட்டாரா கமல்

    மேலும், பிரச்சனை ஏதும் வேண்டாம், சுமுகமான முறையில் படம் வெளியாக வேண்டும் என்பதற்காக இப்படியொரு சமரசத்தை செய்து கொண்டாரா கமல் என்கிற கேள்வியை தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். மேலும், கமல் விக்ரம் படத்தின் ரிலீஸ் மற்றும் பிசினஸ் பாதித்து விடக் கூடாது என பயந்து தான் இப்படியொரு முடிவை மேற்கொண்டாரா? என்கிற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

    அந்த கெட்ட வார்த்தை

    அந்த கெட்ட வார்த்தை

    இந்த மாதிரி இக்கட்டான நேரத்தில் வீரர்கள் எல்லாம் என்ன சொல்லுவாங்க தெரியுமா என சொல்லி விட்டு கெட்ட வார்த்தையை பேசி பின்னர் பார்த்துக்கலாம் என கமல் பேசிய வசனங்கள் டிரைலரில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஆனால், சென்சாருக்கு பிறகு தியேட்டரில் அந்த வசனம் மற்றும் விஜய்சேதுபதி லெந்தியாக பேசும் சில கெட்ட வார்த்தைகள் அப்படியே மியூட் செய்யப்பட்டு ஊமை வசனங்களாக இடம் பெற்றது பற்றியும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    Recommended Video

    Vikram Review | Yessa ? Bussa ? | Kamal Haasan #Review
    தேவையில்லாமல் ஏன்

    தேவையில்லாமல் ஏன்

    மாஸ்டர் படத்திலும் இப்படித்தான் விஜய் பேசிய கெட்ட வார்த்தைகள் தியேட்டர்களில் மியூட் செய்யப்பட்டன. தணிக்கை குழு அதற்கு அனுமதி அளிக்காது என்று தெரிந்தும் டிரைலர் புரமோஷனுக்காக இயக்குநர்கள் ஏன் தேவையில்லாமல் அது போன்ற வசனங்களையும் காட்சிகளையும் வைக்கின்றனர் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    English summary
    Pathala Pathala song controversial lyrics and cuss words cut from Vikram movie stirs some controversy in social media. Netizens trolled Kamal Haasan for that.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X