»   »  பத்து எண்றதுக்குள்ள... 1000 காட்சிகள்!

பத்து எண்றதுக்குள்ள... 1000 காட்சிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரம் நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள படம் வரும் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகிறது.

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் நான்காவது படம் 'பத்து எண்றதுக்குள்ள'.


வருகின்ற 21ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி வெளி வர உள்ள இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் விஜய் மில்டன். விக்ரம் - சமந்தா முதல் முறை ஜோடி சேரும் இந்தப் படத்துக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளது.


Paththu Endrathukkulla gets 1000 shows per day

யு சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம், அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என தயாரிப்பு நிறுவனம் நம்புகிறது.


இந்தப் படத்துக்கு ஒரே நாளில் 1000 காட்சிகள் கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி இதன் தமிழ்ப் பதிப்பும், இதன் தெலுங்கு மற்றும் ஹிந்தி பதிப்புகள் அடுத்த மாதமும் வெளி வருகின்றன.

English summary
Vikram's Paththu Endrathukkulla will released worldwide on Oct 21st and the movie has got 1000 shows per day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil