»   »  பத்து எண்றதுக்குள்ள Vs நானும் ரவுடிதான்!

பத்து எண்றதுக்குள்ள Vs நானும் ரவுடிதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகிறது தனுஷ் தயாரிப்பில், விஜய் சேதுபதி - நயன்தாரா நடித்துள்ள 'நானும் ரௌடிதான்'.

இப்படத்தில் நடிகர் பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர்.ஜே பாலாஜி, மொட்ட ராஜேந்திரன் போன்ற நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்


Paththu Endrathukkulla Vs Naanum Rowdythaan

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வுண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் உருவாகியுள்ள நானும் ரௌடிதான் ட்ரைலர் நேற்று இரவு 7.00 மணிக்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வருகிற புதன்கிழமை அக்டோபர் 21ஆம் வெளிவர உள்ளது.


இதே தேதியன்று பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது விக்ரம் - சமந்தா நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள படம்.


ஏற்கெனவே ருத்ரமாதேவி அதிக அரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ளது. அடுத்த வாரத்திலேயே இரண்டு பெரிய படங்கள் வெளியாவதால் அதன் வசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

English summary
Naanum Rowdythaan and Paththu Endrathukkulla are releasing on Oct 21st worldwide.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil