சிம்புவின் பிறந்தநாளுக்காக காத்திருக்கும் பத்து தல… புது ரிலீஸ் தேதியுடன் புது அப்டேட்

சென்னை: சிம்பு நடித்து வந்த பத்து தல படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 23ம் தேதி நிறைவுப்பெற்றது.

'சில்லுன்னு ஒரு காதல்' கிருஷ்ணா இயக்கும் இந்தப் படம், கன்னடத்தில் வெற்றி பெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது.

சிம்புவுடன் கெளதம் கார்த்திக், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் டிசம்பரில் வெளியாகவிருந்தது.

கம்பேக் கொடுத்த சிம்பு

கம்பேக் கொடுத்த சிம்பு

பல சர்ச்சைகளில் சிக்கி வந்த சிம்பு, கடந்தாண்டு வெளியான மாநாடு திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம், சிம்புவுக்கு மேலும் ஒரு சூப்பர் கம்பேக் கொடுத்தது. இதனால், மீண்டும் சிம்புவின் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், தற்போது அவர் நடித்து வந்த 'பத்து தல' படத்தின் ஷூட்டிங், கடந்த மாதம் 23ம் தேதி நிறைவடைந்தது. ஆனால், டிசம்பர் மாதம் ரிலீஸாகவிருந்த பத்து தல, சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புதிய ரிலீஸ் தேதி

புதிய ரிலீஸ் தேதி

வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த பத்து தல, அடுத்தாண்டு ரிலீஸாகும் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இந்தப் படம் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, பிப்ரவரி 3ம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது. சிம்புவின் ரசிகர்களுக்கு அவரது பிறந்தநாள் ட்ரீட்டாக இருக்க வேண்டும் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். மேலும், தற்போது தான் சூட்டிங் நிறைவானதால், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் இயக்குநர் கிருஷ்ணா வேகம் காட்டியுள்ளாராம்.

விரைவில் அபிஸியல் அப்டேட்

விரைவில் அபிஸியல் அப்டேட்

சிம்பு நடித்துள்ள பத்து தல, கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டராக நடித்துள்ளார். சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே டிசம்பரில் வெளியாகவிருந்த தனுஷின் 'வாத்தி' திரைப்படமும் பிப்ரவரி ரிலீஸுக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் புதிய படம்?

சிம்புவின் புதிய படம்?

பத்து தல ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்ட சிம்பு, அடுத்து எந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது. கொரோனா குமார், விண்ணைத்தாண்டி வருவாயா 2 அல்லது வெந்து தணிந்தது காடு 2 ஆகிய படங்களில் ஏதாவது ஒன்றில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் சிம்புவுக்கு சூப்பர் மேன் கதையுடன் ஏஆர் முருகதாஸ் காத்திருப்பதாகவும், இந்தக் கூட்டணியில் தான் அடுத்த படம் உருவாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X