சிம்புவின் பத்து தல படத்தில் இருந்து வெளியான மிரட்டலான போஸ்டர்: திடீர் திடீர்ன்னு வரும் அப்டேட்

சென்னை: சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கும் பத்து தல திரைப்படம் டிசம்பரில் வெளியாகிறது.

சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் பாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கவுதம் கார்த்திக் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து பத்து தல படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

மூன்றாம் தலைமுறை நடிகர்

மூன்றாம் தலைமுறை நடிகர்

கறுப்பு வெள்ளை திரைப்படங்களில் நடித்து சினிமாவில் அடியெடுத்து வைந்தவர் பழம்பெரும் நடிகர் முத்துராமன். அவரது மகன் என்ற அடையாளத்துடன் பாரதிராஜா இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் கார்த்திக். அவரது மகன் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய 'கடல்' திரைப்படம் மூலம் ஹீரோவானார். மூன்றாவது தலைமுறை நடிகராக திரைத்துறையில் தடம் பதித்துள்ள கவுதம் கார்த்திக் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

முன்னணி நடிகராக போராட்டம்

முன்னணி நடிகராக போராட்டம்

கடல் படத்தைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள கவுதம் கார்த்திக், தற்போது பத்து தல படத்தில் பிஸியாக இருக்கிறார். சிம்பு ஹீரோவாக நடிக்கு இந்தப் படத்தில் கவுதம் கார்த்தி, போலீஸ் கேரக்டரில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரது ரொம்பவே முக்கியமான படமாக இது இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

மிரட்டலாக வெளியான போஸ்டர்

மிரட்டலாக வெளியான போஸ்டர்

பத்து தல படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டராக நடித்து வரும் சிம்புவுக்கும் கவுதம் கார்த்திக்கும் இடையே தாறுமாறான ஆக்சன் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் இருவரும் மோதிக்கொள்ளும் ஃபைட் சீன் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடைபெற்றது என படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், 33வது பிறந்தநாளைக் கொண்டாடும் கவுதம் கார்த்திக்கு வாழ்த்து தெரிவித்து அவரது போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

நம்பிக்கையில் கவுதம் கார்த்திக்

நம்பிக்கையில் கவுதம் கார்த்திக்

கடல் திரைப்படத்தில் அறிமுகமானதில் இருந்து தரமான வெற்றிக்காக போராடி வரும் கவுதம் கார்த்திக், பத்து தல படத்தை அதிகம் நம்பியுள்ளார். கண்டிப்பாக அவரது முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என, திரை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிம்புவுடன் நடிப்பதால், நிச்சயம் கவுதம் கார்த்தியின் கேரியரில் இது சிறப்பான படமாக இருக்கும் என அவரது ரசிகர்களும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X