நீ டிரெஸ் பண்ணத அமீர் பார்த்தானா? ஆர்டர் போட்ட பாவனியை அதிர வைத்த நிரூப்.. ரொம்ப குசும்புதான்!
சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் பணப்பெட்டிகள் வரிசையாக வந்து கொண்டிருந்த நிலையில், சில ருசிகர சம்பவங்களும் அரங்கேறின.
அமீர் இன்னும் ஏன் வெளியேறவில்லை என்பதும் பாவனி ஏன் வெளியேறவில்லை என்பதும் பிக் பாஸுக்கே தெரிந்த ரகசியமாக இருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
பாவனி மீது இனி என் ஃபோகஸ் இருக்காது என அமீர் சொன்னதில் இருந்து அமீர் மீது பாவனியின் முழு ஃபோகஸும் திரும்பி இருக்கிறது.

ஒரே கலர் டிரெஸ்
பாவனி நீல நிற உடையை அணிந்து கொண்டு மேக்கப் செய்து கொண்டிருந்த நிலையில், அமீரும் நீல நிற டிசர்ட் அணிந்து கொண்டு அவர் அருகே வந்து நிற்க என் கலரை ஏன் காப்பி அடிக்கிற என அமீரை பார்த்து கேட்டு அந்த டிரஸ்ஸை மாற்ற சொன்னார் பாவனி.

பாவனியை பாதிக்குதாம்
இதுதான் சான்ஸ் என நினைத்துக் கொண்ட அமீர் மக்களே பாருங்க நான் போட்டுட்டு வந்த ப்ளூ கலர் டிரெஸ் பாவனியை ரொம்பவே பாதிக்குதாம் அவங்களுக்காக இதை மாத்துறேன் என நல்லா தெளிவாக பதிவு பண்ணி விட்டு வேறு ஒரு டிசர்ட்டை மாற்ற போனார்.

இடையில் புகுந்த நிரூப்
தனது பெட்டில் படுத்திருந்த நிரூப் அவளுக்காக நீ ஏன் டா உன்னோட டிரெஸ் மாத்துற என கேட்டு மாற்ற வேண்டாம் என தடுத்தார். மேலும், என்னோட பேன்ட் கலரும் ப்ளூ தான் எனக்காக நீ போட்டுட்டு வந்திருக்க என சொல்லு என அமீரிடம் எடுத்து சொல்ல இருவரும் நிரூப்பை மதிக்கவே இல்லை.

அமீர் பார்த்தானா
என்னால் மீண்டும் உடை மாற்ற முடியாது. அமீர் போய் மாத்திட்டு வா என பாவனி ஆர்டர் போட்டதும் இடைமறித்த நிரூப் நீ டிரெஸ் பண்றத பார்த்து அமீர் அதே கலர் டிரெஸ் போட்டானா என குசும்புத்தனமாக கேட்டு பாவனியை அலற விட்டு விட்டார் நிரூப்.
Recommended Video

இன்னும் ஒரு வாரம் ஓடும்போல
பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் பாவனி போவார், அமீர் எஸ்கேப் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் ஒரு வாரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு உள்ளேயே இருக்கலாம் என பிளான் போட்டு விட்டார்கள். இன்னும் ஒரு வாரம் இதே டிராக் தான் தான் ஓடும்போல என பிக் பாஸ் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











