வொர்ஸ்ட் பர்ஃபார்மரான பாவனி.. ப்ளூ டீமில் வொர்க்கே நடக்கல என பகிரங்க குற்றச்சாட்டு!

சென்னை: ப்ளூ டீமில் டீம் வொர்க்கே நடக்கவில்லை என பாவனி வொர்ஸ்ட் பர்ஃபார்மராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், பொங்கி எழுந்தார்.

பாவனிக்கு ஆதரவாக அமீர் இமான் அண்ணாச்சியுடன் பயங்கர சண்டை போட்டார்.

யாருமே எதிர்பாராத விதமாக அக்‌ஷராவும் பாவனிக்கு சப்போர்ட் செய்து ராஜுவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்கியது தான் செம ஹைலைட்.

வொர்ஸ்ட் பர்ஃபார்மர்

வொர்ஸ்ட் பர்ஃபார்மர்

பிரேக்கிங் நியூஸ் டாஸ்க்கில் பாவனி மற்றும் நிரூப் வொர்ஸ்ட் பர்ஃபார்மர் என அதிகபட்ச ஹவுஸ்மேட்கள் சொன்ன நிலையில், பாவனி மற்றும் நிரூப் பாதாள சிறைக்குள் அடைக்கப்பட்டனர். இவ்வளவு மழை சென்னையில் பெய்தும் பிக் பாஸ் வீடும் பாதாள சிறையும் எப்படி தான் மூழ்காம இருக்கு என நெட்டிசன்கள் நக்கல் அடித்து வருகின்றனர்.

டீம் வொர்க் இல்லை

டீம் வொர்க் இல்லை

ராஜுவுக்கு பெஸ்ட் பர்பார்மர் கொடுத்த பாவனி பதிலுக்கு ராஜுவிடம் இருந்து ஆதரவு கிடைக்காமல் வொர்ஸ்ட் பர்ஃபார்மர் என தனது பெயர் அடிபட்டதும் சூடாகி விட்டார் பாவனி. ப்ளூ டீமில் டீம் வொர்க்கே இல்லை என்றும் ராஜு தன்னிச்சையாக செய்தி வாசித்தார் என்றும் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.

ஆதரவு தந்த அமீர்

ஆதரவு தந்த அமீர்

வைல்டு கார்டு என்ட்ரியாக வந்து பாவனியின் மனதில் நல்ல இடத்தை பிடித்த அமீர் பாவனி சொல்றது தான் சரி அவங்க பேச்சை நீங்க யாருமே ஒரு டீமா கேட்க வில்லை என பாவனிக்கு ஆதரவாக பேசினார். பதிலுக்கு அமீரிடம் வாக்குவாதம் நடத்திய இமானுக்கும் அமீருக்கும் பயங்கர சண்டையே வெடித்தது.

ஆப்பு வைத்த அக்‌ஷரா

ஆப்பு வைத்த அக்‌ஷரா

பாவனிக்கு யாருமே எதிர்பார்க்காத விதமாக திடீரென அக்‌ஷராவும் சப்போர்ட் பண்ண ஆரம்பித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ராஜு தான் வொர்ஸ்ட் பர்ஃபார்மர் என்று சும்மா வெளுத்து வாங்கி விட்டார். அவர் கொண்டு வந்த டாப்பிக்கை ராஜு ஏன் செய்தியாக்கவில்லை எனக் கேட்க? ராஜு அதில் தனிப்பட்ட தாக்குதல் இருந்தது என்று பதில் அளித்தார். அக்‌ஷரா சிபியை டார்கெட் செய்தாரா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அபிநய் என்ன பண்ணாரு

அபிநய் என்ன பண்ணாரு

வொர்ஸ்ட் பர்ஃபார்மர் கொடுத்த நிலையில், பெரிய பஞ்சாயத்தே பாவனி பண்ண நிலையில், ரெட் டீமிடம் நிரூப்பும் தனது அதிருப்தியை தெரிவித்தார். என்னை விட அபிநய் என்ன பண்ணிட்டான் என கேள்வி எழுப்ப அபிநய் 50 நாளும் பிக் பாஸ் வீட்டில் என்னலாம் நடந்தது என கலெக்ட் பண்ணி சொன்னாரு என பிரியங்கா சப்போர்ட் செய்தார்.

Recommended Video

Pavani கிட்ட Thamarai ஒரு மணி நேரம் என்ன பேசினார் | Bigg Boss 5 Tamil Day 58 Mini's View
ஜெயிலுக்கு போக மேக்கப்

ஜெயிலுக்கு போக மேக்கப்

மீண்டும் ஜெயிலுக்குப் போக போறோமே என்கிற ஆத்திரத்தில் நிரூப் இருக்க செம கூலாக மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு பாவனி ஜெயிலுக்கு போக தயாராக பாதாள சிறைக்குத் தானே போற ஃபாரீனுக்கா போற எதுக்கு மேக்கப் என பங்கம் பண்ணி விட்டார் நிரூப்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X