அமீர், அபிநயை காப்பாற்ற தீயாய் வேலை செய்யும் பாவனி ஆர்மி.. அப்போ இந்த வாரம் இவர் தான் எவிக்டா?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியல் வெளியானதும் யார் வெளியே போவார் என்கிற கருத்து கணிப்பை ரசிகர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த வாரம் கண்டிப்பாக அபிநய் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என ஏகப்பட்ட பேர் கமெண்ட் அடித்து வரும் நிலையில், பாவனி ஆர்மியினர் பக்காவாக வேற வேலை பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வாரம் பாவனி மற்றும் பிரியங்கா நாமினேஷனில் இல்லாத நிலையில், அவரது ரசிகர்கள் அமீர் மற்றும் அபிநய்க்கு ஓட்டுக்களை போட்டு வருகின்றனர்.

காயின் கேப்டன் பாவனி
கடந்த வாரம் காயின் யூஸ் பண்ணி எப்படி நிரூப் கேப்டனாக மாறினாரோ அதே போல இந்த வாரம் காயினை யூஸ் பண்ணி கேப்டனாக மாறி உள்ளார் பாவனி. தொடர்ந்து 7 வாரத்துக்கு மேல் பாவனியை கஷ்டப்பட்டு காப்பாற்றி வந்த அவரது ஆர்மியினருக்கு இந்த வாரம் செம ரெஸ்ட் தான்.

பிரியங்காவும் இல்லை
தாமரை செல்வி நாமினேட் செய்தும் ஏன் பிரியங்கா நாமினேட் ஆகவில்லை என அக்ஷராவிடம் கேட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ராஜு, பிரியங்கா உள்ளிட்டோரை நாமினேட் பண்ணாலும் முதலிலேயே சேவ் ஆகிவிடுகின்றனர் என்பதை அறிந்த ஹவுஸ்மேட்ஸ் இந்த வாரம் அவர்களை நாமினேஷனுக்கு கொண்டு வரவில்லை.

பாவனியுடன் நெருக்கம்
பிரியங்காவுடன் நெருங்கி பழகினால் எல்லா புரமோக்களிலும் வந்து கடைசி வரை நிகழ்ச்சியில் நீடிக்கலாம் என அபிஷேக் எப்படி ஸ்ட்ராட்டஜி போட்டு விளையாடி இரு முறை எவிக்ட் ஆனாரோ அதே போல இந்த வாரம் அமீர் எவிக்ட் ஆவார் என எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பது போல பாவனி ஆர்மியினர் அமீருக்கு ஓட்டுப் போட்டு வருகின்றனர்.

அபிநயை காப்பாற்ற முயற்சி
அதே போல பாவனியின் முன்னாள் நெருங்கிய நண்பரான அபிநயையும் இந்த வாரம் காப்பாற்ற பாவனி மற்றும் பிரியங்கா ஆர்மியினர் போட்டி போட்டு வருகின்றனர். இதனால், இந்த வாரமும் அபிநய் கடைசியாக சேவ் ஆகி விடுவாரோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நிரூப்புக்கு டார்கெட்
கடந்த வாரம் காயினை யூஸ் பண்ணி கேப்டனான நிரூப் இந்த வாரம் நாமினேஷனை ஸ்வாப் செய்து தப்பிக்கலாம் என நினைத்தார். ஆனால், சஞ்சீவை பார்த்தால் அங்கிள் மாதிரி தெரியுது ஒழுங்கா விளையாட மாட்டார் என தப்புக் கணக்கு போட்ட நிரூப் அவருக்கு பதிலாக பிரியங்காவை போட்டிக்கு அழைத்திருக்கலாம் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நிரூப்பும் தொடர்ந்து கடைசியாக சேவ் ஆகி வரும் நிலையில், இந்த வாரம் அவரை வீட்டுக்கு அனுப்ப போறாங்க என்றும் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











