இனிமே என் ஆட்டத்தை பாருங்க சார்.. சேவ் ஆன பிறகு சவால் விட்ட பாவனி.. ஃபைனலுக்கு போவாரா?
சென்னை: சனிக்கிழமை நிகழ்ச்சியில் பிரியங்கா முதல் ஆளாக சேவ் ஆன நிலையில், ஞாயிற்றுகிழமை எபிசோடில் பாவனி முதல் நபராக காப்பாற்றப்பட்டார்.
Recommended Video
கடந்த இரு வாரங்களாக குறும்படம், அமீர் முத்தம் என பாவனியை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் துரத்தினாலும் பாவனியின் ஆர்மியினர் தொடர்ந்து அவருக்கான ஆதரவை அளித்து வருகின்றனர்.
தனக்கு வாக்களித்து காப்பாற்றிய ரசிகர்களுக்காக இனி விளையாட போவதாக பாவனி சொன்னது ஆர்மியினரை உற்சாகப்படுத்தி உள்ளது.

துரத்திய சர்ச்சைகள்
அபிநய் மற்றும் பாவனி இடையே என்ன உறவு நிலவுகிறது என்கிற பஞ்சாயத்து பின்னர் அதை தொடர்ந்து பாவனி அபிநய் பற்றி அமீர் மற்றும் ராஜுவிடம் பேசிய குறும்படம் எல்லாவற்றுக்கும் மேலாக அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்த சர்ச்சை என கடந்த சில வாரங்களாக பாவனியை ஏகப்பட்ட சர்ச்சைகள் துரத்தின.

மன வலிமை
யார் என்ன பேசினாலும், என்னை நான் மாற்றிக் கொள்ள போவதில்லை. இதுவரை எப்படி நான் நானாக இருந்து வருகிறேனோ அதே போல இனியும் இருக்கப் போகிறேன் என பல சர்ச்சைகளை கடந்தும் முழு மன வலிமையோடு பாவனி தொடர்ந்து விளையாடி வருகிறார்.

மாற்றி மாற்றி அட்வைஸ்
பாவனியுடன் சேராதே என அமீருக்கு பலரும் அமீருடன் சேராதே என பாவனியின் அக்காவும் ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது மாற்றி மாற்றி அட்வைஸ் பறந்து கொண்டே இருந்தன. ஆனாலும், இருவரும் இன்னமும் நண்பர்களாக பழகி வருவதை மாற்றிக் கொள்ளவில்லை.

பிரியங்காவுக்கு அடுத்து
சனிக்கிழமை எபிசோடில் பிரியங்கா காப்பாற்றப்பட்ட நிலையில், ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் சிபியையும் பாவனியையும் அருகருகே அமர வைத்த கமல் இந்த இருவரில் பாவனி சேவ் என சிபிக்கு மக்கள் மத்தியில் எந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை புரிய வைத்து விட்டார்.

இனி விளையாடுவேன்
கடந்த சில வாரங்களால் ஏகப்பட்ட பிரச்சனைகளால் சங்கடத்தில் இருந்த பாவனிக்கு மக்கள் நமக்கு ஓட்டுப் போட்டு காப்பாற்றுகிறார்கள் என்பது தெளிவாக புரிந்த நிலையில், நிரூப், சிபிக்கு எல்லாம் முன்னால் தான் நாம இருக்கிறோம் என உணர்ந்த பாவனி ஓட்டுப் போட்ட மக்களுக்கு நன்றி சொல்லி விட்டு இனி என் ஆட்டத்தை பாருங்க கமல் சார் என உறுதியளித்தது பாவனி ஆர்மியினரை உற்சாகமடைய செய்துள்ளது.

டாப் 3
மக்கள் போடும் ஓட்டுக்களை வைத்து பார்த்தால் முதல் மூன்று இடங்களில் ராஜு, பிரியங்கா மற்றும் பாவனி ஆகிய மூவர் தான் உள்ளனர் என்றும் இந்த வாரம் தலைவியாக இருந்து தாமரை தப்பித்துக் கொண்டார். அடுத்த வாரம் பாவனி, சஞ்சீவ் மற்றும் தாமரை மூவரில் அந்த மூன்றாம் இடம் யாருக்கு கிடைக்கப் போகுது என்பது தெரிந்து விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஃபைனலுக்கு வருவாரா?
அமீர் மற்றும் பாவனி அடுத்த வாரம் பிரிந்து தனித்தனியே விளையாடினால், பாவனி தனது முழு திறமையையும் காட்டினால் ஏகப்பட்ட மக்கள் சப்போர்ட் அவருக்கு உள்ள நிலையில், நிச்சயம் ஃபைனலுக்கு பாவனி செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











