Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக்பாஸிற்கு பிறகு முதல் முறையாக லைவில் வந்த பாவனி..என்ன சொன்னார் தெரியுமா ?
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இன்று முதல் முறையாக வீடியோ வெளியிட்டுள்ளார் பாவனி ரெட்டி. மனம் திறந்து அவர் பேசி உள்ள வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.
Recommended Video
பிக்பாஸின் ஒவ்வொரு சீசனிலும் ஒருவர் பரபரப்பாக பேசப்படுவார். அதே போல் அதிகமான ரசிகர்களின் மனங்களை கவருவார். அப்படி பிக்பாஸ் சீசன் 5ல் அதிகமானவர்களை கவர்ந்ததுடன், காதல் விவகாரங்களில் விமர்சிக்கப்பட்டவர் பாவனி ரெட்டி.
சிபியை
ஹக்
பண்ண
பாவனி..
அபிநய்
பக்கமே
போகலையே..
அந்த
கேள்விக்கு
அப்படியே
மழுப்பிட்டாரே?

அதிகம் கிசுகிசுக்கப்பட்ட பாவனி
அபினய் - பாவனி இடையேயான பழக்கம், காதலா, நட்பா என மிகப் பெரிய விவாதம் நடைபெற்றது. இதை வைத்து வீட்டிற்குள் பலமுறை சண்டை வந்துள்ளது. ஆரம்பத்தில் அபினய்யுடன் நெருக்கம் காட்டி வந்த பாவனி, வைல்ட் கார்டு என்ட்ரியாக அமீர் வந்த பிறகு அவருடன் அதிக நேரம் செலவிட துவங்கினார். இதுவும் கிசுகிசுக்கப்பட்டது.

மூன்றாவது இடம்பிடித்த பாவனி
ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் சென்று, கடைசி நிமிடத்தில் காப்பாற்றப்பட்ட போட்டியாளர் பாவனி தான். எத்தனை கிசுகிசுவில் சிக்கினாலும் பலரின் மனங்களை கவர்ந்த பாவனி, இறுதியில் மூன்றாவது இடம்பிடித்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை தந்தது. நான்காவது இடத்தில் இருந்த பாவனிக்கு கடைசி வாரத்தில் அதிகமானவர்கள் ஓட்டளித்ததால் அவர் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.

ஓடிடி.,யில் பங்கேற்க வாழ்த்துக்கள்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நேற்று முதல் முறையாக இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களிடம் பேசினார் பாவனி. ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் வெளியிப்படையாக பதிலளித்தார். தனக்கு உடல்நிலை ஒத்துக் கொள்ளாததால் உடனடியாக ஐதராபாத் வந்து விட்டதாக கூறினார். உள்ளே இருக்கும் போது வெளியில் என்னை எப்படி பார்ப்பார்கள். எனக்கு மக்கள் ஆதரவு வழங்குவார்களா என குழப்பத்தில் இருந்தேன். ஆனால் வெளியில் வந்ததும் நீங்கள் கொடுத்த ஆதரவை பார்த்து அசந்து போய் விட்டேன். ஓடிடி.,யில் பங்கேற்கும் எண்ணம் இல்லை என்றார்.

டிரெண்டிங் குயின்
தொடர்ந்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், அனைவரின் அன்பு, அக்கறை, ஆதரவிற்கு நன்றி. நான் இதை எதிர்பார்க்கவில்லை. எனக்கு யாரும் இல்லை என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு நிறைய பேர் கிடைத்துள்ளார்கள். நீங்கள் தான் எனது முக்கிய குடும்பம் என நெகிழ்ச்சியாக பேசி உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் trending queen என பாவனியை புகழ்ந்துள்ளனர். எப்போதெல்லாம் நீங்கள் நாமினேஷன் வந்தீர்களோ அப்போதெல்லாம் நான் உங்களுக்கு ஓட்டளித்திருக்கிறேன் என தெரிவித்துள்ளனர்.