Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அமீருக்கு லவ் யூ சொன்ன பாவனி.. நெருக்கமான புகைப்படத்தை பதிவிட்டு காதலை உறுதி செய்தாரா?
சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டவர் பாவனி.
இவர் தனது காதல் கணவரின் தற்கொலை குறித்து நிகழ்ச்சியில் பேசி ஏராளமான ரசிகர்களின் உருக்கத்தை சம்பாதித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியின் சக போட்டியாளர் அமீர், பாவனியிடம் தன்னுடைய காதலை சொன்னார். ஆனால் அதை பாவனி ஏற்றுக் கொள்ளவில்லை.
கமலுக்கு
பிரபுதேவா,
பிரபுவிற்கு
ராஜு
சுந்தரம்...
பிரதாப்
போத்தன்
படத்தில்
நடந்த
சுவாராஸ்யம்

விஜய் டிவி
விஜய் டிவியின் பிக் பாஸ் வீடு, ஏராளமான மகிழ்ச்சி, சோகம், காதல், ஏக்கம், வருத்தம், பரிதவிப்பு உள்ளிட்ட உணர்ச்சிகளின் சங்கமமாகவே காணப்படும். அந்த 100 நாட்களில் போட்டியாளர்களின் சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகளும் அதிகமாக பகிர்ந்து கொள்ளப்படும். அந்த வகையில்தான் கடந்த 5வது சீசனும் காணப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி
இதில் கலந்துக் கொண்ட நடிகை பாவனி, ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி ஆகிய சீரியல்களில் நடித்திருந்தவர். பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துக் கொண்ட இவர், ஒரே வாரத்தில் தன்னுடைய காதல் கணவர் தற்கொலை செய்துக் கொண்டது குறித்து சோகத்துடன் பகிர்ந்துக் கொண்டார். இதையடுத்து சக போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் வருத்தம் தெரிவித்தனர்.

பாவனியிடம் காதலை சொன்ன அமீர்
இந்தத் தொடரில் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்த நடன இயக்குநர் அமீர், பாவனியிடம் தன்னுடைய காதலை சொன்னார். ஆனால் இந்தக் காதலை இதுவரை நேரடியாக ஏற்றுக் கொள்ளாமல் போக்கு காட்டி வருகிறார் பாவனி. தற்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் இந்த ஜோடி இணைந்து நெருக்கம் காட்டி வருகிறது.

அமீருக்கு பிறந்தநாள் வாழ்த்து
தொடர்ந்து வெளியாகிவரும் புகைப்படங்களில் இந்த ஜோடியின் நெருக்கம், பாவனி அமீரின் காதலை ஏற்றுக் கொண்டாரா என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே எழுப்பிவந்தது. இந்நிலையில், தற்போது அமீருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பாவனி, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

ஐ லவ் யூ சொன்ன பாவனி
மேலும் இந்த உலகத்தின் கீழ் அமீர் விரும்பும் அனைத்தும் அவருக்கு கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போஸ்ட்டின் ஹைலைட் என்னவென்றால் இறுதியில் பாவனி, ஐ லவ் யூ டா என்று கூறியுள்ளார். இந்தப் பதிவின் மூலம் தற்போது அமீரின் காதலை பாவனி ஏற்றுக் கொண்டதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.