போடா டேய்... இன்றைக்கு இவங்களா....ராஜுவுடன் நேருக்கு நேர் மோதும் பாவ்னி
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வெற்றிகரமாக ஆறு வாரங்களைக் கடந்து, ஏழாவது வாரத்தின் நிறைவுப் பகுதியை நெருங்கி வருகிறது. மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் தற்போது, 6 பேர் வெளியேறி உள்ளனர்.
ஏழாவது வாரத்தில் 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வார தலைவராக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வார வீட்டின் ஆளுமை அதிகாரம் வருணுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரத்தில் வெளியேற போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

லக்சுரி பட்ஜெட் டாஸ்க்
இந்நிலையில் நிஜம் காட்டும் கண்ணாடி என்ற தலைப்பில் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் மற்றொருவரின் கண்ணாடியாக மாறி அவரைப் பற்றி சொல்ல வேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் நிரூப்- அபிநய் இடையே மோதல் ஏற்பட்டது.

மாற்றப்பட்ட ஜோடிகள்
இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. நிகழ்ச்சியின் 45 வது நாளான இன்றைக்கான முதல் ப்ரோமோவில், பிரியங்காவின் கண்ணாடியாக மாறும் ராஜு, பாவ்னியிடம் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார். இதே போல் மற்றவர்களின் ஜோடியும் மாற்றப்படுகிறது.

ராஜு – பாவ்னி மோதல்
இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாவ்னி பற்றி முழுவதுமாக தெரிந்து ஃபிரண்ட்ஷிப் வைக்க சொல்றீங்களே. அதற்கு எனக்கு விளக்கம் தேவை என கேட்கிறார். அதற்கு ராஜு, உன்னை போல் கண்ணாடியாக இருக்கும் போது அது பற்றி நான் சொல்கிறேன் என்கிறார். நீங்க எப்பவுமே இப்படி தான் சொல்றீங்க என்கிறார் பாவ்னி.

இன்ஃபுலியன்ஸ் பண்றீங்க
நீங்க இன்ஃபுலியன்ஸ் பண்ணுவது போல் உள்ளது என்கிறார் பாவ்னி . இன்ஃபுலியன்ஸ் ஆகுறதும், ஆகாததும் அவர் பார்த்துக் கொள்வார் என்கிறார் ராஜு. ஓட்டு போடும் போது எல்லோர் பற்றியும் நல்லவிதமாக சொல்லும் நீங்கள் என்னை பற்றி எப்போதும் இப்படியே சொல்றீங்க என்கிறார் பாவ்னி.

போடா டேய்
நீ இப்படி பண்றாளா, அப்படி பண்றாளா என ஒரு டவுட்ல தான் உன்கிட்ட இருந்து டிஸ்ட்டன்ஸ் வைத்து இருந்தேன். உன்கிட்ட பேசுறது தான் தப்பு. டிஸ்ட்டன்ஸ் வைத்திருப்பது தான் கரெக்ட். அதற்கு பாவ்னி, போடா டேய் என்கிறார். இதை பார்த்து விட்டு ரசிகர்கள் பலர், தினம் ஒருவர் சண்டையா. நேற்று நிரூப் - அபினய் சண்டை. இன்று பாவ்னி - ராஜுவா என கேட்டுள்ளனர்.

பாவ்னியை டார்கெட் செய்யும் ராஜு
ராஜு, பாவ்னியை டார்கெட் செய்கிறார். ராஜு, பாவ்னி மிரர் டாஸ்க் மாஸா இருந்தது. பேசாம ரெண்டு பேரும் ஃபிரண்ட் ஆகலாம். சிபி ஏன் திரும்ப திரும்ப ஒரே விஷயத்த பேசிகிட்டு இருக்கார். ஓப்பனிங் நல்லா தான் இருக்கு. ஆனா ஃபினிசிங் சரியில்லையே விஜய் டிவி அட்மின் என பலர் கலாய்த்துள்ளனர்.

பாவம் பாவ்னி
அட போங்கடா...பேசுற போல சண்டை போடவே மாட்டேங்குறீங்க. ராஜுவுக்கு பாவ்னி பிடிக்கவே இல்லை. அது தான் காரணம். ராஜு எப்போதும் பாவ்னியவே டார்கெட் பண்ணிகிட்டு இருக்கார். பாவ்னி, அபினய் பாவம் என பலர் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











