»   »  'தல' படத்திற்கு 3 ஸ்டார் தானா?: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை தாக்கிய ரசிகர்கள்

'தல' படத்திற்கு 3 ஸ்டார் தானா?: டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை தாக்கிய ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கட்டமராயுடு படத்திற்கு 3 ஸ்டார் கொடுத்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரை பவன் கல்யாண் ரசிகர்கள் தாக்கியுள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த வீரம் படம் தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ரீமேக்கில் அஜீத் கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், தமன்னா கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாஸனும் நடித்திருந்தனர்.


Pawan Kalyan fans attack a TV anchor

இந்த படம் ரிலீஸான அன்றே ரூ.55 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் பவன் கல்யாண் ரசிகர்களை தெலுங்கு டிவி சேனல் ஒன்று விவாத நிகழ்ச்சிக்கு அழைத்தது.


அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபர் கட்டமராயுடு படத்திற்கு 5க்கு 3 ஸ்டார் கொடுத்தார். அவ்வளவு தான் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு கோபம் வந்து அவர் மீது பாய்ந்துவிட்டனர்.


மேலும் நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்த பொருட்களை எல்லாம் உடைத்தார்கள். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Pawan Kalyan fans have attacked a telugu channel TV anchor for giving three stars to Katamarayudu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil